அறுவகையிலக்கணம்149
இச்சூத்திரத்தால் வினைச்சொல்வகை முடிக்கப்பட்டு இவ்வியல்பின் இறுதிப் பகுதியாகிய பல்வகைச் சொற்களுக்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது.
(215)
4. பல்வகைச் சொற்கள்
51.செய்போ நில்எனல் ஆதிய யாவும்
 ஏவற் சொற்கள்என்று இயம்புதல் இயல்பே.
செய், போ, நில் என்பன போன்ற கட்டளைவினைகள் அனைத்தும் ஏவற்சொற்கள் என்றுகூறப்படும் என்றவாறு.
(216)
52.வளர்ச்சி தளர்ச்சி அகலம்எனல் ஆதிய
 அமைதிச் சொல்என்று அறைவது முறையே.
வளர்ச்சி. தளர்ச்சி, அகலம் போன்ற சொற்கள் ஒரு பொருளின் அமைப்பைக் குறிப்பிடுவதால் இவை போன்றவற்றை அமைதிச் சொற்கள் எனலாம் என்றவாறு.
அமைதிச்சொல், தன்மைச்சொல், ஒப்புச்சொல், இரக்கச்சொல், கூட்டும் சொல், வியன் சொல், வெறுப்புச் சொல் என்றெல்லாம் இவர் பிரித்துப் பிரித்துக் கூறுவது அவற்றின் பொருள்வேறுபாடு காட்டவே ஆகும். இவைகள் கருவியாகவோ விதியாகவோ அமைந்து இலக்கணத்திற்குப்பயன்படுவதில்லை. பெயர், வினை, இடை, உரி என்ற முறையான பகுப்பில் இவையனைத்தும் அடங்கிவிடுகின்றன.
(217)
53.இனிப்பு புளிப்பு கசப்பு கோபம்
 சாந்தம்எனல் ஆதிய தன்மைச் சொல்லே.
இனிப்பு, புளிப்பு, கசப்பு, கோபம், சாந்தம் என்பன போன்ற சொற்கள் ஒன்றன் குணத்தைக் குறித்தலால் இத்தகையன தன்மைச் சொற்கள் எனப்படும் என்றவாறு.
(218)