சொல்லிலக்கணம்150
54.உறுஎனல் ஆதிய உரிச்சொல் ஆமே.
 
உறு என்பதைப் போன்ற சொற்கள் உரிச்சொற்கள் ஆம் என்றவாறு,
ஒரு பொருளின் மிகுதியை உணர்த்தும் உறு என்ற சொல்லைப் போன்று பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் சொற்கள் உரிச்சொல் எனப்படும்.
(219)
55.ஓம்எனல் ஆம்எனல் ஆதிய ஒப்புச்
 சொற்கள் ஆம்எனத் துணிவார் புலவோர்.
ஓம், ஆம் போன்ற சொற்கள் பிறர் கூறுவனவற்றிற்கு உடன்படுவோர் பயன் படுத்தும் ஒப்புச் சொற்கள் ஆகும் என்றவாறு.
இங்குக் கூறப்படும் ஒப்புச்சொல் என்பது உடன்பாட்டுப் பொருளில் ஆளப் பட்டது. உவமைப் பொருளில் அன்று.
(220)
56.ஏஎனல் ஆதிய விளிச்சொல் ஆமே.
 
ஏ என்பதைப் போன்ற சொற்கள் பிறரை அழைக்கும் விளிச்சொற்கள் ஆம் என்றவாறு.
(221)
57.ஐயோ என்றிடல் ஆதிய சிற்சில
 இரக்கச் சொல்உள என்பது முறையே.
ஐயோ என்பதைப் போன்ற இரக்கத்தைக் குறிக்கும் சொற்கள் சிலவும் வழங்கி வருகின்றன என்றவாறு.
(222)
58.கூகூ எனல்பலர்க் கூட்டும் சொல்லே.
 
கூகூ என்பது ஓரிடத்தில் பலரைக் கூட்டுவிப்பதற்குரிய சொல் ஆகும் என்றவாறு.
(223)
59.ஆஓ என்றிடல் வியன்சொல் ஆமே.