ஆ ஓ என்னும் ஒரெழுத்தொருமொழிகள் பெரும்பாலும் வியப்பைக் காட்டுவன என்றவாறு. |
ஆ வலிக்கிறது, ஒ கொடியது என இவை துன்பம், இரக்கம் பற்றியும் வருமாதலின் உரையில் பெரும்பாலும் எனப்பட்டது. (224) |
60. | சீஎனும் வெறுப்புச் சொல்முதல் தேடி, | | எம்மொழி யோடும் இம்மொழி எனல்போல் | | வருதுணைச் சொல்வரை வகுத்துக் கூறினும் | | கழகத்து அன்றுஇடைக் காடன் கழறும் | | சொல்முதல் எழுதொணா தனசில துலங்கும்; | | அன்றியும் கடல்நீர் அளக்கை போலாம் | | ஆதலில் பிரிவுஇயல்பு இம்மட்டு அடக்கித் | | தள்ளரும் சார்புஇயல்பு அறைகுதும் சற்றே. |
|
சீ எனப்படும் வெறுப்புச் சொல்முதல் ஒவ்வொன்றாகத் தேடி, எம்மொழியோடும் இம்மொழி என்பதுபோல் இணையாக வருகின்ற துணைச்சொற்கள்வரை எடுத்துப் பலவாறாக வகைப்படுத்தி உரைத்தாலும் கடைச்சங்கத்தில் முன்னாளில் இடைக்காடன் பாடிய பாட்டில் இடம் பெற்றதும் வரிவடிவம் காட்ட முடியாததுமாகிய சொல்லைப் போன்ற சில எஞ்சும். அன்றியும் இம்முயற்சி கடல்நீரை முகத்தலளவையால் அளக்க முற்படுவது போலாகும். ஆதலால் பிரிவியல்பாகிய இப்பகுதியை இத்துடன் முடித்துக் கொண்டு இன்றியமையாததாகிய சார்பியல்பைச் சற்றுக் கூறுவோம் என்றவாறு. |
எம்மொழியோடும் இம்மொழி என்புழி, எம், இம் என்ற இரண்டும் இணைந்துநின்ற பொருள்தருதலின் இவை போன்றவற்றைத் துணைச்சொற்கள் என்றார். இடைக்காடர் பாடலாக வழங்கப்படும் பாடல்கள் வருமாறு:- |
ஆற்றங் கரையின் அருகிருக்கும் மாமரத்தில் |
காக்கை இருந்து கஃகஃகெனக்-காக்கைதனை |