சொல்லிலக்கணம்156
66.மகிதலம் புகழ்மொழி அனைத்தும் மங்கலச்
 சார்பே; நூல்முகம் தனில்உறத் தகும்எனில்
 தமிழின்வித்து அனையவர் தணவார் அன்றே.
“உயர்ந்தவர்களால் போற்றப்படுகின்ற சொற்கள் யாவுமே மங்கலத்தன்மை வாய்ந்தவை. எனவே அவை ஒரு நூலின் முதற்சொல்லாக இருக்கும் தகுதி வாய்ந்தனவே” என்றால் தமிழ்மொழியின் சாரத்தை அறிந்த அறிஞர்கள் அதை மறுக்க மாட்டார்கள் என்றவாறு.
பாட்டியல் நூல்கள் நூல் முகப்பில் குறிப்பிட்ட சில சொற்களே வர வேண்டுமென்று வரையரை செய்துள்ளன. அக்கோட்பாட்டை மறுக்கும் முகத்தால் உயர்ந்தவர்களால் ஆளப்படுகின்ற சொற்கள் அனைத்தும் மங்கலச் சொற்களே என வலியுறுத்துகிறார். இதே கருத்து மறுபடியும் 233 ஆம் நூற்பாவில் தெளிவாக அநுவதிக்கப்படுகிறது.
இங்கு மகிதலம் என்னும்சொல் ஆகுபெயராக உயர்ந்தோரை உணர்த்திற்-சொற்களின் தகுதி உணர்ந்தோர் அவரே ஆதலின்.
(231)
67.மங்கலச் சொல்லின் எழுத்துமூன்று ஐந்துஏழ்
 ஆகியும், ஈறு திரியாதும் அவிர்தரல்
 இனிதே; பிறழினும் எள்ளார் புலவர்.
ஓர் இலக்கியத்தின் முதற் சொல்லாகவரும் மங்கலமொழி மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எழுத்துகளைக் கொண்டதாகவும், புணர்ச்சியால் ஈறு திரியாததாகவும் இருந்தால் சிறப்பாம். அவ்வாறு அமையாவிடினும் அறிஞர்கள் இகழமாட்டார்கள் என்றவாறு.
பண்டைக் காலத்தில் இல்லாமல், இடைக் காலத்தில் தோன்றி, இந்நூலாசிரியர் காலத்தே ஓரளவு காலூன்றிவிட்ட பாட்டியல் நூற்கருத்துகளை முற்றிலும் ஒதுக்காமலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமலும் இடைப்பட்ட ஒரு வழியைக்