| கைக்கொள்கிறார். மங்கலச் சொல்லிற்கு எழுத்து வரையறை கட்டாயமில்லை; ஆனால் இருந்தால் சிறப்பு என்கிறார். (232) | 
| | 68. | அடல்மிகும் மடங்கல் அன்னசீர் புலவர் |  |  | வைத்தசொல் அனைத்தும் மங்கலம் ஆமே. | 
 | 
	| (தலைமையை உடைய) வலிமைமிக்க சிங்கம் போன்ற புலவர்கள் தங்கள் நூன்முகத்தில் வைத்த சொற்கள் யாவும் மங்கல மொழிகளே என்றவாறு. | 
	| விலங்கினத்துள் எங்ஙனம் சிங்கம் தலைமைஉடையதோ அங்ஙனம் புலவரவையில் தலைவராயிருக்கத் தகுதியுடையவர்கள் மடங்கல் அன்ன சீர்ப்புலவர் எனப்பட்டனர். சீர் இங்குத் தலைமை. (233) | 
| | 69. | நூற்பெயர் முதல்மொழி பாட்டுடைத் தலைவன் |  |  | குலம்பெயர் நாள்கோள் ஆதிய குறிக்கும் |  |  | பொருத்தம் சொற்சுவை புகுதாச் செவிக்கும் |  |  | மழைஎனப் பொழியா வாய்க்கும் வேண்டும்; |  |  | ஆயினும் அவற்றுட் சீரிய தாய |  |  | ஒருவிதம் உரைக்குதும் உலகின் பொருட்டே. | 
 | 
	| மேகம் மழை பொழிவதைப் போன்று கவி பொழியத் தெரியாத புலவனோடு கவிதையின் சொற்சுவை, பொருட்சுவைகளை உணர்ந்து துய்க்க இயலாத சுவைஞரே நூற்பெயர், நூலின் முதல் சொல்லாகிய மங்கல மொழிக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் குலம், பெயர், உடு, கிரகம் ஆகியவற்றால் அமைகின்ற பொருத்தம் முதலியவைகளை வேண்டுவர். எனினும் அத்தகைய பொருத்தத்தில் ஒன்றை மட்டும் உலகினருக்காகக் கூறுவாம் என்றவாறு. | 
	| பாடாப்புலவரும், அறியாச்சுவைஞரும் வேண்டுவர் என்றதனானே பெரும்புலவரும், நல்ல, இரசிகரும் வேண்டார் என்பது பெறப்பட்டது. இங்கும் பாட்டியல் கருத்துகளைப் புறக்கணித்தலும் பிறகு ஒருவாறு தழுவிக்கொள்ளலும் என்ற நிலையைக் |