சொல்லிலக்கணம்160
ஒ எனில் அரசப் பொருத்தம். நான்காவதாகிய அகரமும் அடுத்த இகரமும் முறையே விருத்தம், மரணம் எனப்படும். இவ்விரண்டுமே நீக்கத்தக்கன. இவைகயே “ஐந்தெழுத்துள் அடங்குதல் தேறி, ஆதி அந்தம் புணர்விதம் அறிந்து” என்று நூற்பாவில் குறிக்கப்பட்டன.
பாட்டியலில் கூறப்படவேண்டிய செய்தியாகிய இது சொல்லியல்பில் கூறப்பட்டதற்கு நூலாசிரியரே அமைதியும் கூறினார். இது அடுத்து யாப்பியற் செய்திகள் இங்கே கூறப்படுவதற்கும் பொருந்தும்.
(235)
71.செய்யுட் களின்நிலை தெரித்தற் பொருட்டு
 நேர்நிரை எனும்இரு பகுதியின் சார்புச்
 சொல்உள தண்டமிழ்த் தொன்மைவாய் பாடு;
 அவற்றையும் பகருதும் அறிந்த வாறே.
பாக்களின் அசை, சீர் முதலியவைகளைத் தெளிவாக்கும் பொருட்டுத் தமிழில் நேர், நிரை என்ற இரு சொற்கள் மிகப் பழங்காலந்தொட்டே வழங்கி வருகின்றன. (இச் சார்பியல்பிலேயே-அவைகளும் சார்புச் சொற்களாயிருப்பதால்) அவற்றைப்பற்றி யாம் அறிந்த வண்ணம் கூறுவாம் என்றவாறு.
(236)
72.குறில்நெடில் தனித்தும்மெய் ஒன்றுஇரண்டு அணைந்தும்
 குஎனக் கூஎனக் கல்எனக் கார்என
 நெய்த்துவாழ்ந்து எனும்இரு மொழிகளின் ஈற்றெழுத்து
 அகன்றால் எனவரும் அறுவகை நேரே.
குற்றெழுத்து தனியாகவும், ஒருமெய் அணைந்தும், இரு மெய்யோடும் வருவனவும் இதேபோல் நெடில் தனியாகவும், ஒன்று அல்லது இரண்டு மெய்யொடும் வருவனவும் ஆகிய ஆறும் நேரசை எனப்படும். கு, கல், நெய்த், கூ, கார், வாழ்ந் என்னும் ஆறும் முறையே இவற்றிற்கு உதாரணங்கள் ஆகும் என்றவாறு.