சொல்லிலக்கணம்162
மட்டும் இடைநின்ற இம்மெய்களைக் கருதாது இரு எழுத்துகள் இணைந்த நிரையாகக் கொள்க. இம்மெய்களை அடுத்த குறில் மீண்டும் ஒரு குறிலடுத்து வரினும் நிரையாகவே கொள்க என்பார் தன்மை, பொன்வில் என இரண்டு உதாரணம் காட்டினார். இது யரலவுக்கும் பொருந்தும். ஓர் இலக்கிய ஆட்சி காண்போம்.
இதே நூற்பாயிரத்தில் “ஐந்தே இலக்கணமென் றாயிரம் பேர் கூறல்கண்டும்”1 என வருகிறது. கூறல்கண்டும் என்ற சீர் தேமாந்தண்பூ என்ற நாலசைச் சீராகிறது. வெண்பாவில் மூன்றசைகளுக்கு மேல் வரக்கூடாது. எனவே கூ, றல்கண், டும் எனப் பிரித்து நேர், நிரை, நேர், கூவிளங்காய் என அலகிடப்பட வேண்டும். இங்கு றல்கண் என்ற எழுத்தின் கூட்டம் பொன்வில் போல அமைந்ததைக் காண்க.
இத்தகைய சொற்கள் நிற்கும் நிலையால் தேவையானால் தான் நிரை எனப்படும் எனவும், இல்லையேல் நேர்நேர் என்றே கொள்ளப்படும் என்பதும் கருத்து.
(239)
75.நேர்நாள் நிரைமலர் இவைகள் ஓர்அசைக்
 சொற்கள் ஆம்எனத் துணிந்தனர் புலவோர்.
நேர் அசையும் நிரை அசையும் (வெண்பாவின் ஈற்றில்) ஓர் அசைக் சீராக வரும்போது முறையே நாள் என்றும் மலர் என்றும் புலவர்களால் கூறப்படும் என்றவாறு.
நூற்பா ஓர் அசைச் சொல் எனினும் வெண்பா ஈற்றடி “தூக்கம் வருகின்றது”2 எனவும் வரலாமாதலின் உரையில் ஓரைசச்சீர் எனப்பட்டது. வெண்பாவின் ஈற்றில் என்பது யாப்பு மரபால் சேர்க்கப்பட்டது.
(240)
76.இணைநேர் தேமா; இணைநிரை கருவிளம்;
 முன்நேர் பின்நிரை கூவிளம்; முன்நிரை