அறுவகையிலக்கணம்163
பின்நேர் புளிமா ஆம்; இவை நான்கும்
 ஈர்அசைச் சொற்கள்என்று இயம்பிடல் இயல்பே.
இரு நேரசைகள் இணைந்த சீர் தேமா ஆகும். இரு நிரை யசைகள் இணையின் அது கருவிளம் எனப்படும். நேர்நிரை யசைகளால் கூவிளச் சீரும், நிரைநேர் அசைகளால் புளிமாச்சீரும் தோன்றும். இந்நான்கும் ஈரசைக் சீர்கள் எனப்படும் என்றவாறு.
இந்நூற்பாவிலும் சொற்கள் என்ற ஆட்சியைச் சீர்கள் என்ற பொருளிலேயே கொள்க.
(241)
77.தேமா புளிமா இரண்டும்ஓர் இடத்தே
 காசு பிறப்புஎனக் கழறநிற் பனவே.
தேமா, புளிமா ஆகிய இரு சீர்களும் (வெண்பாவின் ஈற்றுச் சீர் ஆகும்) ஓர் இடத்தில் (இரண்டாம் அசையாக உகரத்தைப் பெற்றுக்) காசு, பிறப்பு என்னும் வாய்பாடுடையனவாய் விளங்கும் என்றவாறு.
(242)
78.ஈரசைச் சொல்லுடன் நேர்உறில் காய்என
 நிலைஉறில் கனியென நிகழ்த்தல்உண்டு; அவற்றை
 மூவசைச் சொற்கள் ஆம்எனல் முறையே.
(தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் ஆகிய) நான்கு ஈரசைச். சீர்களுடன் மூன்றாவதாக ஒரு நேர் அசை சேர்ந்தால் காய் எனவும், நிரையசை சேர்ந்தால் கனி எனவும் கூறப்படும். இத்தகையவை மூவசைச் சீர்கள் என்று பெயர் பெறும்.
தேமாங்காய், தேமாங்கனி என்பது போல வரும்.
(243)
79.இணையசைச் சொல்லே ஒன்றோடொன்று இணைந்து
 நாலசை யாதலுண்டு; அம்முறை ஆம்கால்
 முன்மொழி இயல்பில் பிறழாது ஒழிந்த
 பின்வரும் நேர்நேர் தண்பூ, நிரைநிரை