சொல்லிலக்கணம்164
நறுநிழல், நேர்நிரை தண்ணிழல், நிரைநேர்
 நறும்பூ ஆம்எனத் திரிதரும் அன்றே.
இரண்டு ஈரசைச் சீர்கள் தம்மோடிணைந்து நான்கசைச் சீர்கள் ஆகும். அப்படி ஆகுங்காலை தேமா முதலிய முதல் ஈரசைச் சீரின் வாய்பாடு முன்னர் (241ஆம் நூற்பாவில்) கூறப்பட்டவாறே இருக்கும். இரண்டாவதாகிய ஈரசைச் சீர் நேர்நேர் ஆயின் தண்பூ எனவும், நிரைநிரை ஆயின் நறுநிழல் எனவும், நேர்நிரை என்றால் தன்ணிழல் எனவும், நிரைநேர் என்றால் நறும்பூ எனவும் வேறு பெயர்களால் குறிக்கப்படும் என்றவாறு.
தேமாந்தண்பூ, கருவிளநறுநிழல் என்பவைபோல வரும்.
(244)
80.ஓர்அசை ஈரசை வெவ்வேறு இருந்து
 மூன்றசை தோன்றிய முறைப்படி நான்கசைச்
 சொல்லொடுஓர் அசைவந்து தோன்றல்உண்டு; அதுநேர்
 ஆயிற் பூஞ்சீர் நிழற்சீர் என்றும்
 நிரைஎனில் பூநலம் நிழல்நலம் என்றும்
 கொள்ளுமாறு உணர்வோன் கோடியில் ஒருவனே.
ஓரசையும் ஈரசையும் தனித்தனியாகஇருந்து மூன்றசைச் சீராக இணைந்ததைப் போன்றே நான்கசைச் சீரோடும் அசைவந்து சேரலாம். அப்படி வருகின்ற ஐந்தாவது அசை நேர் ஆயின் சீர் எனவும், நிரை ஆயின் நலம் எனவும் பெயர் பெறும், கோடியில் ஒருவரே இந்த ஐந்தசைச் சீர்களை அறிய வல்லார் என்றவாறு.
யாப்பிலக்கண நூல்கள் அனைத்தும் பொதுச்சீர்கள் என்னும் நாலசைச் சீர்களுக்குமேல் விரிப்பதில்லை. இவர் அப்பொதுச் சீர்கள் பதினாறொடும் நேர், நிரை என்னும் அசைகளைச் சேர்த்து முப்பத்திரண்டு ஐந்தசைக் சீர்களை வகுத்துக் கொள்கிறார். தேமாந்தண்பூஞ்சீர் முதல் கருவிளநறுநிழல் நலம்