அறுவகையிலக்கணம்165
ஈறாக முப்பத்திரண்டு வகையான ஐந்தசைச் சீர்கள் உண்டாகும். இவர் யாப்பிலக்கணத்தில் சூத்திரப்பாவைக் குறிக்குமிடத்து ஓரடிக்கு இரண்டு நான்கசைச் சீர்கள் வருமென்றும் சில இடங்களில் அவற்றுள் ஒன்று ஐந்தசையாக இருக்கலாம் எனவும் கூறுகிறார். அதற்காக இங்கேயே முன்மொழிந்து கொள்கிறார். “அரும்பொருள் விரிப்பதற்கான சூத்திரப்பா நிழல்பூ ஈற்றுள நான்கசைச் சொற்கள் இணைந்தும் ஒவ்வோரிடத்தே நலம் சீர் ஈற்றுள ஐந்தசைச் சொற்கள் வந்தும் ஓரடியாகும்.......”1
ஐந்தசைச் சீர் பற்றிய கோட்பாடு வேறு நூல்களில் கூறப்படாமையின் கொள்ளுமாறு உணர்வோன் கோடியில் ஒருவனே என்றார்.
(245)
81.இவற்றைத் தளைஎன்று இயம்பலும் பழமை
 யாப்பிலக் கணத்தில் பிரிவுஇயங் குறுமே.
இத்தகைய சீர்களால் தளைகள் உண்டாகும் எனலும் தொன்மையான கருத்தாகும். அத்தளைகளைப் பற்றிய செய்திகள் யாப்பிலக்கணத்தில் விளங்கும் என்றவாறு.
சீர்கள் வேறு; இரு சீர்களுக்கிடையில் தட்டு நிற்பதாகிய தளைகள் வேறு. இந்நூற்பாவின் சொற்போக்கு சீர்களே தளைகள் என்னுமாறு அமைந்து கிடப்பினும், இச்சீர்கள் தளைகள் தோன்ற நிலைக்கலன்களாக அமையும் என்ற கருத்தில் உரை கூறப்பட்டது. இந்நூலாசிரியர் அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் ஆகிய இரு நூல்களிலும் எங்கும் தளைகளின் இலக்கணத்தைக் கூறவே இல்லை என்பது வியப்பிற்குரியது.
(246)
82.ஆறசை யாதிய நாடகப் பகுதி
 இசையொடு கூடி அளவின்றிப் பிறழும்;