சொல்லிலக்கணம்166
அவற்றிற் கும்தளை அறையுமாறு உணரில்
 பன்றி முகத்தில் படாம்அணிந் தற்றே.
அடியின் ஓர் பகுதி ஆறசைஅளவும் மிக்கிருத்தல் முதலியன நாடகத் தமிழாகிய கீர்த்தனை, பதம் போன்றவைகளிலும், தனி இசைக்கேஉரிய உருப்படிகளிலும் இசை இலக்கணத்திற்கேற்பப் பலவிதமான மாறுபாடுகளுடன் விளங்கும். அவற்றிற்கு எல்லாம் சீர்வரையறை செய்ய இயலாது. அவ்வாறு அவைகளையும் இயற்றமிழ் வாய்பாட்டால் அலகூட்டிப் பார்க்க முயலுதல் பன்றியின் முகத்தில் படாம் அணிந்ததைப் போலாகும் என்றவாறு.
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் ஒன்றைவிட அடுத்தது எளிமையானது என்பதும். இசை பாடுதற்கு மட்டும் உரியது, நாடகம் அத்தோடு கூத்திற்கும் உரியது என்பதும் இவர் கருத்து. இசையும் கூத்தும் இசை இலக்கண விதிகளுக் கேற்பப் புனையப்படுபவை. மேலும் மிக வெள்ளையாக அமைந்து பாமரர்களையே மகிழ்விக்கத் தோன்றியவை. எனவே அவற்றில் அளபெடை, மரூஉமொழி, கொச்சைச் சொல் விரவி வரும். இயற்றமிழின் செம்மையும், பொருட்கட்டுக் கோப்பும் அவற்றில் இருத்தல் அருமை. எனவே இயற்றமிழின் அலகீட்டு முறைகளை இசை, நாடகப் பகுதிகளுக்கும் கொள்ளுதல் பட்டத்துயானைக்குக் கட்டவேண்டிய முகபடாத்தினைச் சேற்றில் உழலும் பன்றிக்குக் கட்டுவது போலாம் என்றார்.
இசைப் பகுதியும், நாடகப் பகுதியும் தனித்தனியே சிறந்தவை எனக் கருதப்படலாம். எனினும் இயற்றமிழுடன் ஒப்பு நோக்கில் அவை தரத்தில் தாழ்வே என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது.
(247)
83.அயல்படு கலைஉடைக் கணங்களைத் தழீஇ
 இம்மொழி வழிசிலர் இயம்பலர்உண்டு; அவற்றைத்
 தணவலே நலமாம்; வேண்டினும் அவ்வத்
 தெய்வப் பெயர்நிலைத் தளைகொளல் சிறப்பே.