மேயன்றி இது ‘வ’கணம் என்ற நினைவு தோன்றாது. அதே போல் திருமால் அல்லது முருகன் எனில் புளிமா எனத் தொடங்கி விடுவான். மூவசைச் சீரே தான் வேண்டும் என எண்ணமாட்டான். |
இவ்வாறாக இச்சூத்திரம் தமிழ்இலக்கணத்தில் பயனின்றி நுழைந்துவிட்ட ஓரயல்மொழி வழக்கைக் களை முயலும் சிறந்த நூற்பா ஆகும். (248) |
84. | கின்னம்என்று அருண கிரிப்பெயர் முனியும் | | திமுதம்எனக் கம்பனும் செப்பிய முறையில் | | புதுமொழி சாரப் புகல்வார் புகலினும் | | தமிழ்உணர் பெரியோர் தழுவுதல் இயல்பே. |
|
கின்னம் என்று ஒரு புதிய சொல்லை அருணகிரிநாதரும், திமுதம் என்ற புதுமொழியைக் கம்பனும் படைத்துக் கொண்ட பாங்கில் புதுமையான வார்த்தைகளை ஆக்கத் தகுதிஉடைய பெரும் புலவர்கள் அவ்வாறு செய்தாலும் தமிழ் மரபறிந்த சான்றோர்கள் அவற்றையும் ஏற்றுக் கொள்ளுதல் இயல்பே ஆகும் என்றவாறு. |
கின்னம் என்ற சொல் வருத்தம் என்ற பொருள் உடையது. இது கின்ன என்ற வடசொல்லின் தமிழ் வடிவம். அருணகிரி நாதர் இச்சொல்லை, “கின்னம் களையும் கிருபைசூழ் சுடரே”1 “கின்னங் குறித்தடி யேன்செவிநீயன்று கேட்கச்சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கிவிட்டது”2 எனத் தம் நூல்களில் ஆண்டிருக்கிறார். இந்நூலாசிரியர் இது வடசொல் என்பதனை நோக்காமல் அருணகிரிநாதரால் புதியதாகப் படைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ச்சொல் எனக் கருதுகிறார். ஆனால் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதருக்கு முன்பே 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய வேம்பத்தூர் நம்பி தம்முடைய திருவிளையாடல்புராணத்தின் பாயிரத்தில், “அன்னம் பறந்து |