கம்பன் திமுதம் என்ற சொல்லைப் பெய்துள்ளது கீழ்வரும் கவியில்:- “குமுத னிட்ட குலவரை கூத்தனில் திமுத மிட்டுத் திரியுந் திரைக்கடல் துமித மூர்புக வானவர் துள்ளினார் அமுதம் இன்னம் எழும்எனும் ஆசையால்.”2 |
இதைப்பற்றிய ஒரு செவிவழி வரலாறு புலவர்புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இது காலத்திற்கேற்ற புதிய சொல்லாக்கம் தேவை என்பதை உணர்த்தும் நூற்பா ஆகும். (249) |
85. | சார்புஎலாம் மொழியத் தகுமோ? ஆதலின் | | இம்மட் டடக்கி இனித்திரி வியல்பும் | | தெரிந்த வாறு செப்புதும் சிறிதே. |
|
சார்புச் சொற்கள் அனைத்தினையும் முற்றக்கூறி முடிக்க இயலாது. எனவே இவ்வியல்பை இத்துடன் நிறுத்திக்கொண்டு அடுத்துத் திரிவுஇயல்பு என்ற பகுதியில் யாமறிந்தஅளவு சில செய்திகளைக் கூறுவாம் என்றவாறு. |
முன்பே சுட்டிக் காட்டப்பெற்றபடி தமிழ் இலக்கணத்திற்கு இன்றியமையாதன அனைத்தையும் ஓர்ஒழுங்கான வரைமுறை செய்துகொண்டு கூற இவ்வாசிரியர் முயலவில்லை. ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அது தொடர்பான பல கருத்துகளைத் தொகுத்துக் கூறும் முறையில்தான் இந்நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. |
இவ்விறுதிச் சூத்திரத்தால் மூன்றாம் பிரிவாகிய சார் பியல்பு நிறைவு செய்யப்பெற்று அடுத்த திரிவியல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது. (250) |
|