சொல்லிலக்கணம்172
எனவும், மரபு வழிப்பட்ட வாய்பாடு எனவும் பெயர் பெற்று விடுதல் இயல்பே. எனவே அதுவும் திரிவே என்பது இவர்தரும் விளக்கம்.
(251)
87.வாழ்நனை வாணன் என்பது பற்றி
 வாய்பா டில்லா வழிக்கொடு திரித்துச்
 சொல்வது பிழைஎனத் துணிவுறத் தகுமே.
வாழ்நன் என்ற சொல் இலக்கியங்களுள் வாணன் என வழங்கப்படுதல்பற்றி வாய்பாடின்றியும் பலவாறு சொற்களைத் திரித்துப் பயன்படுத்துதல் தவறாகும் எனத் தெளிய வேண்டும் என்றவாறு.
வாழ் என்ற சொல்லோடு நன் என்னும் பகுதி சேர்ந்தால் வீரசோழியம் கூறும், “ஐம்மூன்றதாம் உடல் வன்மைபின் வந்திடில் ஆறொடைந்தாம் மெய்ம் மாண்பதாகும்; நவ்வரின் முன் அழிந்து பின் மிக்க ணவ்வாம்”1 என்ற விதிப்படி வாணன் என்றாகிறது. இந்நூலாசிரியர் இவ்விதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பது முன்பே கூறப்பட்டது.2 எனவே இத்தகைய புணர்ச்சிகளை (உதாரணம் - திகழ்+நாகம் = திகணாகம்; ஏழ்+திரை = ஏடிரை) இவர் வாய்பாடற்றதும் பிழையானது மான சொற்றிரிவுகள் எனக் கருதுகிறார்.
(252)
88.ஆல்உடைக் கடவுளை ஆல்என்று அறைதலும்,
 முருகு நீங்கா முழுதுணர் புலவனை
 முருகுஎனப் பகர்தலும், மொய்குழல் வனிதையை
 மொய்குழல் என்றலும், அன்னவை பிறவும்
 அன்மொழி என்பார் அளவிலார்; அவைகட்
 பின்மொழி முன்மொழி விளக்கும் பெட்பால்
 இவ்விரு மொழிச்சார்பு எனத்திரித்து, இடம்அறிந்து
 ஒன்றொன் றாயே உரைப்பதுஎம் இசைவே.
ஆலமரத்தின் நிழலிலுள்ள இறைவனை ஆல் எனக்கூறலும், இளமை (அல்லது அறிவு மணம்) நீங்காத இளைய