சொல்லிலக்கணம்174
ஆகுபெயர் எப்போதும் தனிச்சொல்லாக வரும். அல்லது சில இடங்களில் அடையடுத்து வரும். தாமரை ஆகுபெயர்; செந்தாமரை அடையடுத்த ஆகுபெயர். இதுவும் ஒரு சொல் நீர்மைத்தே. ஆனால் அன்மொழித்தொகை எப்போதும் சொற்றொடராகவே வரும். மொய்குழல், தேமொழி என்பனவே அன்மொழித்தொகைகளாம்.
அன்மொழித்தொகையில் பெரும்பாலும் பின்மொழியே கூறுபவனின் கருத்தை விளக்கும். முன்மொழி நிலையலாக அமையும் அன்மொழித்தொகைகள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தனவே. இது பற்றியே “பின்மொழி முன்மொழி விளக்கும் பெட்பால்” எனப் பின்மொழிநிலையலை முதலில் வைத்தார்.
“ஒன்று அலா மொழியில் பின்மொழி தொகுவது அன்மொழி என்பர் அவற்றின் உதாரணம் பொற்றொடி கார் குழல் வெண்ணகை எனலாம்; ஒருமொழி ஆகுபெயரோடு இவற்றைச் சொல்வார் உளர்; அது தொல்வழக்கன்று.”1 என்ற இவர் கருத்து இங்கு ஒப்புநோக்கத் தக்கது.
இவர் காலத்தில் தமிழ் இலக்கண உலகில் ஆகுபெயர், அன்மொழித்தொகை பற்றிய ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்து. அச்சர்ச்சையின் பாதிப்பு அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் ஆகிய இருநூல்களின் அன்மொழித் தொகை பற்றிய நூற்பாக்களிலும் தெரிகிறது.
இங்கு நால்வாய், பொற்றொடி, மொய்குழல், ஆல், முருகு, என்ற சொற்கள் தமக்கே உரிய பொருளில் வராது வேற்றுப் பொருள்தந்து நிற்றலின் இவை திரிவு எனக்கொள்ளப்பட்டன.
(253)
89.கப்பணம் உம்மணி ஒருபணம் இருமணி
 ஆதல்போல் திரிவன ஆகு பெயரே.
கப்பணம், உம்மணி போன்ற சொற்கள் முறையே ஒரு பணம், இரண்டுமணி என்பனவற்றைக் குறித்தாற்போலப்