பொருள் திரிந்து வருவன ஆகுபெயர்கள் ஆகும் என்றவாறு. |
க, உ என்பன முறையே எண்களை உணர்த்துங் குறியீடுகள். இவை சொற்களன்று. இக்குறியீடுகள் சொல்லின் நீர்மை பெற்றுப் புணர்வதால் கப்பணம் போன்ற தொடர்கள் தோன்றுகின்றன. இவ்வாறு குறியீடுகள் சொற்களாக ஆகி வருதல் ஆகுபெயர் எனப்படும் என்கிறார். ஆகுபெயர் என்பதற்கு இது ஒரு புதிய கருத்து ஆகும். ஆனால் இவரே ஏழாமிலக் கணத்தில், “ஒரு பொருளினுக்கே உள்ள பெயரை இயைபால் மற்றொன்றினுக்கு எடுத்து உரைத்தல் ஆகுபெயர் என்று அறைவார்; உதாரணம் தாமரை மலரைத் தாமரை எனலும் பொற்பணத்தினைப் பொன் எனலும் போல்பவே”1 எனக் கூறுகிறார். (254) |
90. | ஒருபொருட் பெயரே உரையா துரைக்கில் | | குணத்தால் திகழ்தரக் கூறல் வேண்டும்; | | யானையை மதமலை என்றிடல் உதாரணம்; | | பெயர்த்திரிவு என்றுஇதைப் பேசப் படுமே. |
|
ஒரு பொருளை அதன் இயற்பெயரைச் சொல்லாமல் வேறு வகையாகக் கூறவேண்டிவந்தால், சொல்ல நினைத்தது எப்பொருளை எனத் தெளிவாகப் புரியுமாறு அதன் பண்புகளை வெளிப்படுத்தி உரைக்க வேண்டும். யானையை மதமலை எனக் கூறுவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதைப் போன்றவைகள் பெயர்த்திரிவு எனப்படும் என்றவாறு. |
ஒரு பொருளை அதன் பெயரல்லாத வேறு சொற்களால் கூற நேர்ந்தால் சொல்பவன் தன் கருத்து தெளிவாவதற் கேற்ற சொல்லைப் பெய்து கூற வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர் பொருளறியாது இடர்ப்படுவர். யானையை மதமலை என்றால் மதம் என்ற சொல்லைக் கொண்டு எளிதில் பொருளை உய்த்துணர்ந்து கொள்ளலாம். அங்ஙனமின்றிக் கருமலை என்றால் கூறுபவன் கருத்து விளங்காது. இவ்வாறான மதமலை போன்ற சொல்லாட்சிகளைப் பெயர்த்திரிவு எனக் கொள்ளலாம் என்பது இவர் கருத்து. (255) |
|