சொல்லிலக்கணம்176
91.வருவித்து உரைசெயும் மாற்றம் கூறில்
 எளிதில் தெளியுமாறு இசைக்க வேண்டும்;
 கூலிதந் தானிலை எனுஞ்சொற் கூறுவார்
 வேலைசெய் தமையை விளக்கும் முறையே.
ஒரு செய்தியின் ஒரு பகுதியை உய்த்து உணர்ந்து கொள்ளுமாறு விட்டுவிட்டு மறுபகுதியை மாத்திரம் கூறுவதாயின் எளிதில் உணர்ந்து கொள்வதற்கேற்ற சொற்களால் கூற வேண்டும். கூலி தரவில்லை எனக்கூறினால் சொன்னவர் வேலைசெய்தார் என்பது எளிதில் விளங்குவது இதற்கு எடுத்துக்காட்டாம் என்றவாறு.
கூலி என்ற சொல்லாலே வேலை செய்தமை எளிதில் உணரப்படும். அவனே பணம் தரவில்லை எனக் கூறினால் வாங்கிய தொகையைத் திருப்பித் தருதலா, கடன் தருதலா, கொடையா எனத் தெரியாமல் மயங்க நேரும். எனவே இவ்வாறு மயக்கந் தருமாறு சொல்லாட்சி அமையக்கூடாது.
(256)
92.தன்கருத்து அல்லாப் பொருள்தரும் சொற்கள்
 நன்றுஅல; உதாரணம் நவில்வார் பலரே.
சொல்லுகிறவன் எதை வெளிப்படுத்த எண்ணுகிறானோ அக்கருத்தைத் தெளிவாக உணர்த்தாமல் மாறுபட்ட பொருளைத் தருகின்ற சொற்களைப் பயன்படுத்தல் நல்லது ஆகாது. இவ்வாறு மயங்கப்பேசும் பலரை நாம், நம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். அவைகளையே எடுத்துக் காட்டாகக் கொள்க என்றவாறு.
புலிகொல்யானை எனில் புலியால் கொல்லப்பட்ட யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா எனத் தெளிவாக உணர முடியாது. கூறுபவனின் கருத்திற்கு மாறாகவும் பொருள் கொள்ளப்படலாம். செய்யுட்களில் பல இடங்களில் அன்றே என்ற சொல் ஆளப்படும். அது அசைச் சொல்லா அல்லது