லது மறுப்பா என்று புரிந்துகொள்ள முடியாமல் குழப்பும். இத்தகைய சொற்கள் களையப்பட வேண்டும் என்கிறார். (257) |
93. | ஒருசொல் நால்வகைப் பொருள்தரல் உணர்ந்தே | | முறையிற் கூறுதல் முதிர்தமிழ் வழக்கே. |
|
ஒரு சொல் பல பொருள்களையும் உணர்த்துமாதலின் மயக்கம் ஏற்படாதவாறு தெளிவாகக் கூறுதல் இலக்கண இலக்கிய முதிர்ச்சியாற் சிறந்த தமிழ்மொழியின் மரபாகும் என்றவாறு. |
இங்கே நால்வகை என்றது பல என்னும் பொருளில். நான்கு பேர் போற்ற வாழ்ந்தான், நான்கு வார்த்தை பேசிவிட்டான், நான்கு ஊர்கள் சுற்றியவன் என்ற பேச்சு வழக்கை யொட்டி வந்தது. |
மா என்ற சொல் மாமரம், விலங்குப் பொது, குதிரை, திருமகள், தானியப் பொடி, இருபதில் ஒன்று என்னும் பின்னம், பெருமை முதலிய பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லாகும். இத்தகைய சொற்களை ஆளும்போது அடைச்சொற்களாலோ அல்லது தக்க வினைச் சொற்களாலோ பொருள் மயக்கம் ஏற்படாதவண்ணம் தெளிவு படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இந்நூற்பாவில் வலியுறுத்தப்பெறுகிறது. பாயா வேங்கை, பறவாத்தும்பி போன்ற பழைய வெளிப்படை வழக்காறுகள் இங்கு சிந்திக்கத்தக்கன. (258) |
94. | கமலையை மலையெனக் கலைஎனக் கமஎனப் | | பகர்தலை நடுக்கடைக் குறைப்பதம் போலும் | | பொருத்தினும் நிறைபதம் புகன்றிடில் தகுமே. |
|
கமலை என்ற சொல்லின் முதல், இடை, கடை எழுத்துகளைக் குறைத்து முறையே மலை, கலை, கம என வழங்கினால் அவை முதற் குறை, இடைக்குறை. கடைக்குறை எனப்படும். இத்தகைய ஆன்றோர் வழக்கும் உண்டு. எனினும் முழுப்பதமாக ஆளலே தக்கதாம் என்றவாறு. |