முன்னோர் மொழியைப் போற்றல், திருட்டு ஆகிய இரண்டினையும் படைப்பாளியின் தரத்தைக் கொண்டு(கல்வி, சான்றாண்மை இரண்டும்) மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம். (260) |
96. | எவ்விதச் சொற்களும் தளையும் சந்தமும் | | ஆகித் திதிதரல் அருந்தமிழ்க்கு இயல்பே. |
|
அனைத்துச் சொற்களும் செய்யுளில் தளை, சந்தம் முதலியவை நோக்கி விகாரமடைவது தமிழ்மொழியில் இயல்பேயாம் என்றவாறு. |
இந்நூற்பா, “வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி”1 என்ற செய்யுள் விகாரத்தைக் கூறுகிறது. நூற்பா தளை, சந்தம் எனக்கூறினும் எதுகை முதலிய தொடைகளையும் உரையிற் கோடலாக வருவித்துக் கொள்க. |
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”2 என்ற குறளில் தொட்டது, கற்றது என இருக்க வேண்டியவை தொட்டு, கற்று எனத் தொகுக்கப் பெற்றன. “கமமார் பாவக் கரிகா லான்முற் கரையோர் தீமைத் திரளேதீர்”3 என்புழிக் கரிகாலன் என இருக்க வேண்டியது தனனா தானத் எனும் சந்தத்திற்கேற்பக் கரிகாலான் என நீட்டல் விகாரம் பெற்றது. (261) |
97. | இவ்விதத் திரிவெலாம் இயம்பிற் பெருகும் | | ஆதலிற் சற்றுவேறு அறைகுதும் அன்றே. |
|
இத்தகையே சொல் திரிவுகள் விரித்துக்கூறின் மிகவும் பெருகிவிடும். எனவே இதனை இம்மட்டடக்கிக் கொண்டு கொஞ்சம் வேறு செய்திகளைக் கூறுவோம் என்றவாறு. (262) |
|