அறுவகையிலக்கணம்181
ஐகாரத்தினால் இறும் இயல்பான யானை, வாழை போன்ற சொற்களைஅன்றித் தனியாக ஐ உருபு சேர்தலைக் குறிக்க மொழி ஈற்று ஐ வரில் என்றார். இது இரண்டாம் வேற்றுமை உருபு.
(265)
101.அஃறிணைப் பன்மைச் சுட்டோடு அன்இன்
 ஐமுதற் பிறவரில் அற்றென இடைவரல்
 வாய்பாடு; உதாரணம் அவற்றன் இவற்றின்
 எவற்றை எனல்போன்று இசைப்பார் புலவோர்.
பலவின்பால் சுட்டோடு அன், இன், ஐ முதலிய இடைச் சொற்கள் சேரும்போது அவைகளின் இடையே அற்று (ச் சாரியை) என ஒன்று தோன்றுதல் உண்டு. அவற்றின், இவற்றின், எவற்றை என்பன இதற்கு உதாரணங்களாம் என்றவாறு.
ஐ முதல் பிற என்றதனால் ஆல், ஓடு, உடன், கு ஆகிய உருபுகளையும் கொள்க “வவ்விறு சுட்டிற்கு அற்றுஉறல் வழியே”1 என்றது இதுவே.
(266)
102.இல்எனல் உடைமையை உவமையை உயர்ச்சி
 தாழ்ச்சியை வினையைக் காட்டத் தகும்குறி;
 மதியில் மறுஎனல், பாலில்வெண் பொடிஎனல்,
 அதில்நலம் இதில்இழிவு என்றிடல், அவையிற்
 பேசல் எனல்இவை பிறங்குஉதா ரணமே.
இல் என்னும் இடைச்சொல் உடைமை, உவமை, உயர்வு தாழ்வு, வினை ஆகியவற்றைக் காட்டும் அடையாளம் ஆகும். மதியில் மறு, பாலில் வெண்பொடி, அதில் நலம், இதில் இழிவு, அவையிற்பேசல் என்பன முறையே இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
மதியில்மறு என்பதனை மதியினுடையை மறு எனக் கொண்டு உடைமைப்பொருள் என்கிறார். மதியின் மறுஎனில் உடைமைப்