சொல்லிலக்கணம்182
பொருள் சரியே. மதியில் மறு என்புழி ஏழன்உருபாகக் கொள்ளலே தக்கதென்று தோன்றுகிறது. இல் சாரியை எங்கும் ஆறாம் வேற்றுமையில் வருவதாகத் தெரியவில்லை.
பாலில் வெண்பொடி-பால் போன்ற வெண்ணீறு என உவமைப் பொருளில் வந்தது. அதில்நலம், இதில்இழிவு என்பன வற்றையும் முறையே அதன்கண் உள்ள, இதன் கண் உள்ள என ஏழாம் வேற்றுமையைகவே கொள்ளலாம். அவையிற் பேசலும் இதுவே. இவர் இல் என்னும் இடைச்சொல்லை அடுத்துவரும் சொல்லைக் கொண்டு உயர்ச்சி, தாழ்ச்சி, வினை என்கிறார். அவையில் பேசல் என்பதை வினை என்று சொன்னால் மதியில் மறு என்பதைப் பெயர் என்றும் கூறலாமே. எனவே இல் என்பதனை ஏழாம் வேற்றுமை உருபாகவும், உவம உருபாகவும் கொள்ளலே சரி எனத் தெரிகிறது.
(267)
103.இல்லே இன்என விளங்கல்உண்டு உதாரணம்
 வேட்டலின் என்றதோர் மெய்ம்மொழி யாமே.
இல் என்னும் இடைச்சொல்லே இன் எனவும் வருவது உண்டு. வேட்டலின் எனக் கூறுகின்ற திருக்குறள் ஆட்சியே இதற்கு உதாரணம் ஆகும் என்றவாறு.
இந்நூற்பா “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று”1 என்ற திருக்குறளை நினைந்து கூறியது. திருக்குறள் வேதம் என்ற பொருளில் மெய்ம்மொழி எனப்பட்டது. இல் இன் ஆகத் திரிந்து வருவது வேறு; முன் 262 ஆம் நூற்பாவில் கூறப்பட்ட ஆறாம் வேற்றுமைச் சாரியையாகிய இன் வேறு. அது இயல்பு, இது திரிவு.
(268)
104.உம்எனல் ஒன்றோடு ஒன்றைக் கூட்டவும்,
 உயர்ச்சியைத் தாழ்ச்சியை உணர்த்தவும், பின்னைக்