| கால வினையைக் காட்டவும் தோன்றும்; | | உதாரணம் வேலும் மயிலும் என்கையும், | | தெய்வமும் பொய்யோ, நானும்உய் வேனோ | | என்பவும், இரங்கும் என்றலும் ஆமே. |
| உம்மை ஒரு பொருளோடு மற்றொரு பொருளைச் சேர்த்துக் கூறவும், உயர்வையோ அல்லது தாழ்வையோ குறிப்பிடவும், எதிர்கால விகுதியாகவும் பயன்படுத்தப்படும். வேலும் மயிலும், தெய்வமும் பெய்யோ, நானும் உய்வேனோ, இரங்கும் என்பன முறையே இவற்றிற்கான உதாரணங்கள் ஆம் என்றவாறு. | வேலும் மயிலும்-எண்ணும்மை; தெய்வமும் பெய்யோ-உயர்வு சிறப்பு; நானும் உய்வேனோ-இழிவு சிறப்பு; இரங்கும்-எதிர்கால விகுதி. “எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை தெரிநிலை ஆக்கமோடு உம்மை எட்டே”1 என்பதில் சில இந்நூற்பாவில் இடம் பெற்றன. (269) | 105. | ஏன்ஏம் ஓம்ஆம் என்பவை தன்தம் | | வினைக்குறிய ஆகுப; உதாரணம் விளம்பின் | | மறவேன் சென்றேம் வந்தோம் நின்றாம் | | என்னும்நான் மொழியும் ஆம்எனல் இயல்பே. |
| ஏன், ஏம், ஓம், ஆம் என்பவை தன்மை ஒருமை பன்மைகளுக்குரிய வினைமுற்று விகுதிகள் ஆகும். மறவேன், சென்றேம், வந்தோம், நின்றாம் என்னும் நான்கும் இதற்கு எடுத்துக்காட்டுகாளம் என்றவாறு. | ஏன்-தன்மை, ஒருமை வினைமுற்று விகுதி. | ஏம், ஓம், ஆம்-தன்மை, பன்மை வினைமுற்று விகுதிகள் (270) | 106. | ஆள்அள் இரண்டும் ஆன்அன் ஆண்பாற்கு | | உறுதலில் பெண்பா லுடனுறும் அன்றே. |
| |
|
|