சொல்லிலக்கணம்184
ஆன் அன் என்பவை எவ்வாறு ஆண்பாலில் உடைமையக் குறிக்க வருகிறதோ அவ்வாறே ஆள், அள் ஆகிய இரு விகுதிகளும் பெண்பாலுக்கு வரும் என்றவாறு.
இந் நூற்பாவை 263ஆம் நூற்பாவுடன் மாட்டேற்றிக் கொள்க. சாயல்+ஆள்=சாயலாள்; மேனி+அள்=மேனியள் என உடைமையக் காட்ட வரும்.
இனி ஆள், அள் என்பனவற்றை வினைமுற்று விகுதிகளாகக் கொண்டு கண்டாள், கண்டனள் என்பவைபோல வரும் எனினுமாம்.
(271)
107.குகரம் தனித்தும், உகரமுற் கொண்டும்,
 ஒருமொழி ஈறு திரியத் திரியாது
 ஒற்று மிகுத்தும், அதனோடு அத்துஎனும்
 சொல்இடை தோன்றியும் துலங்கப் புணரின்
 மற்றும் ஓர்மொழி வருமாறு செய்யும்;
 அவற்கு நலம்எனல், ஆவுக்கு நீர்எனல்
 எதுக்குச் சரிஎனல், வீரத் துக்குவேல்
 எனல்உதர ரணமாம் இனிதுஉணர் வார்க்கே.
கு என்னும் (நான்கன்) உருபு தனியாகவோ, தனக்கு முன் உகரத்தைப்பெற்றோ, தான்புணரும் நிலை மொழியின் ஈற்றைத் திரித்தோ, திரிக்காமலோ, மெய்யெழுத்து மிகுத்தோ, அத்துச் சாரியையும் பெற்றோ ஒரு சொல்லுடன் புணர்ந்தால் பொருளை முற்றுவிக்க வேறொரு சொல்லை வருவிக்கும். அவற்கு நலம், ஆவுக்குநீர், எதுக்குச்சரி, வீரத்துக்குவேல் என்பன இதற்கு உதாரணமாம் என்றவாறு.
அவற்கு நலம்-குவ்வுருபு தனித்து வந்தது. ஆவுக்கு நீர்-உகரத்தை முன் பெற்று வந்தது. இவ்விரண்டும் நிலைமொழி ஈற்றைத் திரித்துப் புணர்ந்தன. எதுக்குச்சரி-இனமெய் மிகுத்துப் புணர்ந்தது. நிலைமொழி ஈறுதிரியாத புணர்ச்சிக்கும் இது எடுத்துக்காட்டு. வீரத்துக்கு வேல் - நிலைமொழி ஈறு திரிந்து அத்துச்சாரியை பெற்றுவந்தது. நான்கன் உருபு