இதற்கு இது எனும் பொருளில் வருதலின் மற்றும் ஓர்மொழி வருமாறு செய்யும் என்றார். (272) |
108. | னளமெய் ஈற்றுடைச் சொல்லொடு வல்லினத்து | | உயிர்மெய் முதலுடை வினைமொழி இசைவுறீஇ | | றடமெய் ஆம்கால் ஐஎனக் கொளல்முறை; | | முருகற் பணிதலும், கலைமகட் கருதலும் | | உதாரணம்; வேந்தர்ச் சேர்தரல் என்னல் | | போல்வன பன்மைக்கு அப்பொருள் விளைக்கும் | | மொழிகள்என்று உரைப்பார் முத்தமிழ்ப் புலவோர். |
|
நிலைமொழி ஈறு ன, ள மெய்களுள் ஒன்றாக இருந்து அவை வருமொழிமுதல் வல்லினத்தோடு புணர்ந்து ற, ட மெய்களாகத் திரியும்போது அங்கு (இரண்டன் உருபாகிய) ஐ யின் பொருளைக் கொள்ளலே சரியாகும். முருகற் பணிதல், கலைமகட் கருதல் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம். வேந்தர்ச் சேர்தரல் என்பதுபோல ரகரமும் இனமெய்யும் பெற்றுவருபவை பன்மையில் இரண்டாம் வேற்றுமைப் பொருள் விளைக்கும் என்பர் புலவர் என்றவாறு. |
முருகன் பணிதல் - எழுவாய்த் தொடர், முருகற் பணிதல் - முருகனைப் பணிதல் என்னும் பொருளில் வந்த இரண்டன் தொகை. |
கலைமகள்கருதல், கலைமகட் கருதல் என்பனவும் இவ்வாறே. |
வேந்தன் சேர்தரல், வேந்தர் சேர்தரல்-அல்வழிப்புணர்ச்சி. |
வேந்தற்சேர்தரல் - வேந்தனைச் சேர்தரல் - வேற்றுமை - ஒருமை. |
வேந்தர்ச்சேர்தரல் - வேந்தர்களைச் சேர்தரல்-வேற்றுமை-பன்மை (273) |
|
109. | ஒருபொரு ளுடன் உடைமையைப் பொருத்தில் | | இன்எனும் மொழியிடை தோன்றாது இசைவுறும்; | | உமைமகன் எனும் சொல் உதாரணம் ஆமே. |
|