5. | இயற்கையின் மனத்தினுக்கு இன்ப மேஇனிது | | ஆதலின் அகப்பொருள் அஃதுஎனல் இசைவு;அதுள் | | உறுப்புஇயல்பு அதனைமுன் உரைக்குதும் சிறிதே. |
|
இன்பத்தையே விரும்பித் துய்த்தல் உள்ளத்திற்கு இயல்பாகும். எனவே இன்பப்பாலை அகப்பொருள் எனக்கூறுவது பொருத்தமானதே. அவ்வகப்பொருளில் முதலில் உறுப்பு இயல்பினைக் கொஞ்சம் கூறுவாம் என்றவாறு. |
அகப்பொருள் என்பதற்கு அகத்தால் விரும்பப்படும்பொருள் எனப் பொருள்கொண்டால் அவ்வாறு விரும்பப்படும் பொருள் இன்பமே ஆதலின் அப்பெயர் பொருத்தமானதே என்கிறார். இந் நூற்பாவால் இவ் விலக்கணத்தின் முதற்பகுதியாகிய உறுப்பியல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்கிறார். (282) |
2. உறுப்பியல்பு |
இவ்வியல்பில் இன்பப்பொருளாம் மகளிரின் உறுப்புநலன்கள் விளக்கப்பட்டுள்ளன. இந் நலங்களுள் இயற்கையாக அமைந்தவை இவையிவை எனவும், செயற்கையால் விளைபவை இவையிவை எனவும் பிரித்துக் கூறப்பட்டுள்ளன. உவமான சங்கிரகம் என்னும் தனி உவமையணி நூல்களின் பெரும்பகுதி இங்கு இடம்பெற்றுள்ளது. இது தலைவியின் கூந்தலில் தொடங்கி அடி முடியக் கேசாதி பாதமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக மகளிரைக் கேசாதி பாதமாகவும், ஆடவரைப் பாதாதி கேசமாகவும் வருணிக்க வேண்டுமென்னும் கவிமரபு பற்றி இங்ஙனம் கூறினார். இவ்வியல்பு 23 நூற்பாக்களை உடையது. |
6. | கரியவார் குழலிற் கட்டலும், அவிழ்த்தலும், | | பின்னலும், பிரித்தலும், பிறைமுதற் பணிகளும், | | மலரொடு வண்டும் வந்துவந்து அகல்வன; | | வழுதிகண்டு அரன்நுவல் மணம்அக லாதுஉற்று | | அரியபொற் பாவை அணிக்குஅணி யாமே. |
|