அறுவகையிலக்கணம்195
தக்க அணிகலன்களை அணிந்துள்ள மங்கையின் விழிகளுக்கு நீண்டிருத்தலும் கருமை நிறமும், மருட்சியான பார்வையும், அகலமும், செவ்வரி படர்ந்த அழகும் இயற்கையா யமைந்த பொலிவுகளாகும். கடைக்கண்கள் சிவத்தலும், விடமும் அமுதமும் போல் பார்வையால் துன்பத்தையும் இன்பத்தையும் மாறிமாறித் தருகின்ற பண்பும், நிலவு அழல்போல் வெதுப்பு தலால் கண்ணீரைச் சிந்துதலும் காரணம் உள்வழித் தோன்றி அது நீங்க மறைவனவாம் என்றவாறு.
கடைபடு செம்மை என்றது கலவியில் இதழ் வெளுத்துக் கண்கள் செம்மை நிறமடைவதை. இது மங்கையர்க்குச் சிறந்த எழில் தரும். இனிக் ‘கடைபடு செம்மை’ என்பதனை இரட்டுற மொழிதலாக்கிச் சினத்தால் கண்கள் சிவத்தலையும் கொள்க. கண்கள் சிவக்குமளவு பெருஞ்சினம் கொள்ளல் பெண்களின் மென்மையான இயல்பிற்குச் சற்றும் ஏலாததுஆதலின் கடைபடு என்ற அடை புணர்த்தார். பொதுநோக்கால் ஆடவர்க்கு விடம் போன்ற துன்பத்தையும், சிறப்பு நோக்கால் அமுதம் போன்ற இன்பத்தையும் தருதல் குறிக்கப்பெற்றது. தண்மதி நிலவு கனலாய் வாட்டுதல் பிரிவுக் காலத்தில் ஆகும்.
(286)
10.நல்லாள் நாசியில் நாண்மலர் துத்தி
 போலும் பணிவரும் போகும்; எட் புதுப்பூ
 அனைய தன்மை அசையாது ஒளிருமே.
சிறப்புமிக்க மங்கையின் மூக்கில் அன்றலர்ந்த துத்திப்பூ போன்ற மூக்குத்தி செயற்கைப் புனைவாம்; எள்ளின் புதிய மலர்போன்ற வடிவம் மாறாது விளங்கும் இயற்கைத் தன்மையாகும் என்றவாறு.
“எள்ளும் குமிழும் இலவுஅலர் காம்பும் அள்ளும் சண்பகத்து அரும்பும் நாசிக்கே”1 என்பது உவமான சங்கிரகம்.
(287)