பொருளிலக்கணம்196
11.அணியிழை செந்நிறத்து ஆம்பல் மலர்வாய்க்கு
 இதழ்ச்சுவை, சொல்லிசை, வெண்ணகை நிரைநயம்
 இயற்கை; ஊடலில் இகழ்ந்தழல் ஏனைய.
நல்ல அணிகலன்களைப் புனைந்துள்ளவளாகிய நங்கையின் செவ்வல்வி மலரைப்போன்ற வாய்க்கு இதழ்களின் கனிச்சுவையும், இசையைப்போல் கேட்டாரை உவப்பிக்கும் சொல்லினிமையும், வெண்மையான பற்களின் வரிசையால் ஏற்படும் பொலிவும் இயற்கை அழகுகளாம். ஊடுங்காலை இகழ்ந்து கூறலும், அழுதலும் செயற்கைப் பண்புகளாம் என்றவாறு.
(288)
12.புனையிழைப் பசுங்கிளி போலும் அங்கனை
 கவுட்குஒளி இயற்கை; கமழ்ச்சியும் குறியும்
 மஞ்சளொடு கணவன் வருவிப் பனவே.
சிறந்த அணிகளைப் பூண்டுள்ளவளாகிய பச்சைக்கிளியைப் போன்ற மங்கையின் கன்னத்திற்குப் பிரகாசம் இயற்கையாம். நறுமணம் மஞ்சளாலும், பற்குறி நகக்குறிகள் தலைவனாலும் ஏற்படும் செயற்கைச் சிறப்புகளாம் என்றவாறு.
இது நிரல்நிரைப் பொருள்கோள்.
(289)
13.சேயிழைப் பூங்கொடி செவிக்குத் தலைவன்
 திறல்கேட்டு உவகையைச் சிந்தையிற் பொருத்தல்
 இயற்கை; இடுதொளை வளர்ச்சியொன்று இயற்கைநேர்
 செயற்கை; மணிக்குகை, செம்பொன் ஓலைகள்
 ஆடலும் மாறலும் செயற்கை ஆமே.
செம்மையான அணிகலன்களைப் பூண்ட பூங்கொடிபோல் வாளாகிய பெண்ணின் காதுகளுக்குத் தன் கணவனின் பெருமையைக் கேட்டு, அதனால் விளையும் மகிழ்ச்சியை மனத்தில் இருத்தி வைத்தல் இயற்கைக் குணமாம். பூண்களைப் பூட்டுவதற்காகச் செவிகளில் இடப்பட்ட தொளைகள் நாளடைவில் பெரிதாவது இயற்கையைப் போன்ற செயற்கையாம், மணிகள்