| 11. | அணியிழை செந்நிறத்து ஆம்பல் மலர்வாய்க்கு | | | இதழ்ச்சுவை, சொல்லிசை, வெண்ணகை நிரைநயம் | | | இயற்கை; ஊடலில் இகழ்ந்தழல் ஏனைய. |
|
| நல்ல அணிகலன்களைப் புனைந்துள்ளவளாகிய நங்கையின் செவ்வல்வி மலரைப்போன்ற வாய்க்கு இதழ்களின் கனிச்சுவையும், இசையைப்போல் கேட்டாரை உவப்பிக்கும் சொல்லினிமையும், வெண்மையான பற்களின் வரிசையால் ஏற்படும் பொலிவும் இயற்கை அழகுகளாம். ஊடுங்காலை இகழ்ந்து கூறலும், அழுதலும் செயற்கைப் பண்புகளாம் என்றவாறு. (288) |
| 12. | புனையிழைப் பசுங்கிளி போலும் அங்கனை | | | கவுட்குஒளி இயற்கை; கமழ்ச்சியும் குறியும் | | | மஞ்சளொடு கணவன் வருவிப் பனவே. |
|
| சிறந்த அணிகளைப் பூண்டுள்ளவளாகிய பச்சைக்கிளியைப் போன்ற மங்கையின் கன்னத்திற்குப் பிரகாசம் இயற்கையாம். நறுமணம் மஞ்சளாலும், பற்குறி நகக்குறிகள் தலைவனாலும் ஏற்படும் செயற்கைச் சிறப்புகளாம் என்றவாறு. |
| இது நிரல்நிரைப் பொருள்கோள். (289) |
| 13. | சேயிழைப் பூங்கொடி செவிக்குத் தலைவன் | | | திறல்கேட்டு உவகையைச் சிந்தையிற் பொருத்தல் | | | இயற்கை; இடுதொளை வளர்ச்சியொன்று இயற்கைநேர் | | | செயற்கை; மணிக்குகை, செம்பொன் ஓலைகள் | | | ஆடலும் மாறலும் செயற்கை ஆமே. |
|
| செம்மையான அணிகலன்களைப் பூண்ட பூங்கொடிபோல் வாளாகிய பெண்ணின் காதுகளுக்குத் தன் கணவனின் பெருமையைக் கேட்டு, அதனால் விளையும் மகிழ்ச்சியை மனத்தில் இருத்தி வைத்தல் இயற்கைக் குணமாம். பூண்களைப் பூட்டுவதற்காகச் செவிகளில் இடப்பட்ட தொளைகள் நாளடைவில் பெரிதாவது இயற்கையைப் போன்ற செயற்கையாம், மணிகள் |