பதிக்கப்பெற்ற குழைகள், செம்பொன்னாலாகிய காதோலைகள் போன்ற பூண்களின் அசைவும், அவைகளின் மாற்றமும் செயற்கைப் புனைவுகளாம் என்றவாறு. |
செயற்கையாக இட்டதொளை நாளடைவில் பெரிதாதலின் இயற்கை நேர் செயற்கை என்றார். காதணி பருவத்திற் கேற்ப அவ்வப்போது மாற்றப்படுதலின் மாறலும் என்றார். (290) |
14. | கவின்திகழ் அகல்முகக் கன்னி கமுகுஉறழ் | | மிடற்றுஎழும் மென்குரல் இயற்கை; வேறு எல்லாம் | | செயற்கை யாம்எனச் செப்பிடல் இயல்பே. |
|
அழகுமிகுந்தும் அகன்றும் உள்ள முகத்தை உடைய நங்கையின் பாக்கு மரத்தின் மேற்பகுதியைப் போன்ற கழுத்தில் உண்டாகும் இனிய மென்குரல் இயற்கையாகும். மற்றவை அனைத்தையும் செயற்கையானவை எனக் கூறலே தக்கதாம் என்றவாறு. |
வேறு எல்லாம் என்றது, “வாய்வெருவி நாடும் மிடறூடு மயில் காடை குரலோசை தர”1 என்றதைப் போன்று புட்குர லெழுப்புதலை. (291) |
15. | கொன்றுஉயிர் தரும்விழிக் கோதை முலைக்குக் | | குளிர்ச்சியும் வெப்பமும், குன்றுஎனப் பொதுமி | | இடம்அறிந்து அரும்போர் இயற்றலும் இயற்கை; | | பூணும், களபமும், பொறித்தசித் திரங்களும் | | செயற்கை யாம்எனத் தெளிவது முறையே. |
|
பொதுநோக்கால் நோய்தந்து உயிரை மெலிவித்த பிறகு தானே சிறப்பு நோக்காகிய மருந்தால் அவ்வுயிரை உய்விக்கும் கண்களை உடைய பூமாலையைப்போன்று அழகு வாய்ந்த தலைவியின் நகில்களுக்குக் (கோடையில்) குளிர்ச்சியும், (குளிர் காலத்தே) வெம்மையும், குன்றுகளைப்போற் பணைத்தெழுந்து |
|