பொருளிலக்கணம்198
காலம்அறிந்து கலவிப்போர் புரிதலும் இயல்பான பண்புகளாம். அணிகலன்களும், வாசனைச் சாந்தும், எழுதப்பெறும் தொய்யிற் சித்திரங்களும் செயற்கையாகச் செய்யப்படும் புனைவுகளாம் என்றவாறு.
“வாவியுறை நீரும் வடநிழலும் பாவுஅகமும் ஏஅனைய கண்ணார் இளமுலையும் ஓவியமே மென்சீத காலத்துவெம்மை தரும்; வெம்மைதனில் என்புஆரும் சீதளம் ஆமே”1 ஆதலின் குளிர்ச்சியும் வெப்பமும் ஒருங்கே கூறப்பட்டன.
(292)
16.மென்மையும் வேய்முளை போலும் விளக்கமும்
 இயற்கை; ஆதலில் தொய்யில்மற்று ஏனை
 சுரிகுழற் காரிதன் சுந்தரத் தோட்கே.
சுருண்ட கூந்தலைஉடைய மங்கையின் அழகிய தோள்களுக்கு மிருதுத் தன்மையும், மூங்கில் முளையைப் போன்றுள்ள ஒளியும் மட்டுமே இயற்கைப் பொலிவாம். எனவே வாசனைக் குழம்பால் வரையப்படும் சித்திரஙகள் முதலயன செயறகைப் பு¬வுகளே எனறவாறு.
ஏனை என்றது இயற்கை அல்லாn செயற்ஙையை.
(293)
17.மலர்தலும் குவிதலும் செம்மையும் மயில்அனாள்
 அங்கைக் குணமே; அணிவளை அம்மனை
 கழங்குஇவை ஒவ்வொரு காலத்து உறுபவே.
மயில்போன்ற சாயலைஉடைய மடந்தையின் அழகிய கரங்களுக்கு விரிதலும், குவிதலும் எப்போதும் நிலைத்துள்ள பண்புகளாகும். வரிசையாக அடுக்கப்படும் வளையல்கள், ஆம்மானைக்காய், கழங்கு ஆடும் காய் போன்றவைகள் சிற்சில பருவங்களுக்கு மட்டுமே உரியனவாகும்.
அணிவளை என்பதனை வினைத்தொகையாகங் கொண்டு அணியப்பேற்ற வளையல்கள் ஏனினுமாம்.
(294)