அறுவகையிலக்கணம்199
18.தொய்வே நல்லாள் வயிற்றின் சுயகுணம்;
 கருப்பம் தங்கிய காலத்து விம்முமே.
அழகிய மங்கையின் அகட்டிற்கு உள்ளடங்கி யிருத்தலே இயல்பாம். கருவுற்றிருக்கும்போது அது வீங்கும் என்றவாறு.
19.சேர்வான் மகிழ்வுறும் இயற்கைத் தேய்வும்
 அலமரற் கண்டுறும் ஆடைச் சேர்க்கையும்
 இலங்கிழைப் பூவைதன் இடையிடத்து உளவே.
ஒளிமிக்க பூண்களை அணிந்துள்ளவளும் நாகணவாய்ப்புள் போன்று அழகுடையவளுமாகிய பெண்ணின் இடுப்பின்கண் அவள் காதலனுக்குக் களிப்பூட்டும் சிறுமையும், காமம் மிக்கவழி நெகிழும் தன்மையைஉடைய சேலையின் உறவும் உள்ளன என்றவாறு.
சிற்றிடையாளாதல் இயற்கையும், ஆடை முதலியன செயற்கைப்புனைவும் ஆகும் என்பது, கூறப்பட்டது. ஆடையைக் கூறவே மேகலை போன்ற அணிகளும் பெறப்பட்டன.
(296)
20.கணவற் காண்டொறும் மதப்புனல் கசிதலும்,
 அவன்அகத்து அவிர்ந்துதன் அகத்துஅதைக் கோடலும்
 இயற்கைக் குணமாம்; புணர்ச்சியும் எழில்மகப்
 பேறும்மற் றுளதொரு பெட்பாம் பிறங்கிழைக்
 காரிகை உயிர்எனக் காக்கும் கடிதடத்
 தேரினுக்கு எனமிகச் செப்பினர் தெளிந்தோர்.
ஒளிவீசுகின்ற பூண்களை அணிந்துள்ளவளாகிய மங்கை தன்னுடைய உயிரைப் போல் போற்றிப் பாதுகாக்கும் தேர்த் தட்டைப்போன்ற அல்குற்குத் தலைவனைக் (காம உணர்வுடன்) பார்க்கும்பொழுதெல்லாம் சுரதநீர் ஊறுதலும், அவனுடைய உள்ளத்தில் இடம்பெற்று விளங்குதலும், அவன் கோசத்தைத் தனக்குள் ஏற்றுக்கொள்ளலும் இயல்பான பண்புகளாம். மெய்யுறு புணர்ச்சியால் விளைகின்ற வேறுபாடுகளும், அழகிய