அறுவகையிலக்கணம்201
23.உறுப்புஇயல்பு இவ்வாறு உரைத்தனம்; இனிஅவர்
 குறிப்புஇயல்பு அதனையும் கூறுதும் கூர்ந்தே.
(மகளிரின் உறுப்பு நலன்களைக் கூறும் பகுதியாகிய இந்த) உறுப்பியல்பை இவ்வாறு கூறி முடித்தோம். தொடர்ந்து அம்மகளிரின் குறிப்பின் இலக்கணத்தையும் நன்கு ஆராய்ந்து சொல்வாம் என்றவாறு.
இவ்விறுதி நூற்பாவால் இரண்டாவதாகிய உறுப்பியல்பு நிறைவுசெய்யப்பட்டு அடுத்த பகுதிக்குத் தோற்றுவாய்செய்து கொள்ளப்பட்டது.
(300)
உறுப்பியல்பு முற்றிற்று.
3. குறிப்பியல்பு
பொருள்இலக்கணத்தின் இப்பிரிவில் பேதை முதலிய ஏழு பருவ மாதர்களின் செயல்களும். பொதுவாகப் பெண்களின் புணர்ச்சி, பிரிவுக் கால நிலைகளும் கூறப்படுகின்றன. இப்பகுதி பன்னிரண்டு சூத்திரங்களை உடையது.
24.சிற்றிலில் சிறாரொடு சிறுமணம் பயில்ஏழு
 ஆண்டுடைப் பேதை அகத்தும் அணிமலர்
 உரிஞ்சல்உண்டு; உடைதழீஇச் சிறிதுநாய் உறுமே.
தான் விளையாட்டாகக் கட்டிய சிறிய மணல்வீட்டின் அருகே தன் வயதொத்த சிறுவர்களுடன் பொம்மைக் கல்யாணம் செய்து மகிழும் ஏழு வயதுடையவளாகிய பேதைப் பருவ மகளின் உள்ளத்திலும் காமனின் அழகிய மலர்க்கணை தைப்பது உண்டு. அவள் தன் ஆடைகளைத் தழுவிக்கொண்டு சற்றே நாணமுறுவாள் என்றவாறு.
(301)
25.ஒன்பது ஆண்டுடைப் பெதும்பைதன் உளத்தில்
 காமன் முதற்கணைக் கதுமைசற்று அழுந்தும்;
 தூதளம் பசுங்காய்த் துணைஎன முலைஎழும்;
 கழங்கொடு செவ்வரிக் கருங்கண் பிறழ்தரும்;