| முச்சிலில் மணல்கொடு முன்றில்வாய் கொழியாது | | அச்சமும் மடமும் நாணமும் அணையுமே. |
|
ஒன்பது வயதினளாகிய பெதும்பையின் மனத்தில் மாரனின் முதல் மலரம்புகளின் கூர்மை கொஞ்சம் நன்கு பதியும். அவளுக்குக் கண்டங்கத்திரியின் பசுமையான காய்களைப் போன்று (சிறிய வடிவினதாக) இரு நகில்கள் தோன்றும். அவளுடைய செவ்வரி படர்ந்த கரிய கண்கள் தான் விளையாடும் கழற்சிக்காய்களோடு சுழலும். சிறு முறத்தில் மணலை வைத்துக்கொண்டு, தன் வீட்டின் முன்புறம் அமர்ந்து (சிறு சோறடுவதற்காக) அதனைக் கொழிக்கவிடாமல் அச்சம், மடம், நாணம் முதலிய பெண்மைப் பண்புகள் வந்தடையும் என்றவாறு.. |
முன்றிலில் அமர்ந்து முச்சிலில் மணற்கொழித்தல் பேதைப் பருவச்செயல். சற்று மகடூஉக் குணங்கள் மேலோங்கலின் பெதும்மைப் பருவத்தே அது நீங்கிற்று. (302) |
26. | பன்னிரண்டு ஆண்டுடை மங்கைபந்து அடிக்கும்; | | ஒத்தபாங் கியரோடு ஊசல் ஆடும்; | | நீர்த்தடம் குளிக்கும்; நினைத்துநெட் டுயிர்க்கும்; | | எழில்நலம் பொலிதரும் இணைமுலை காக்கும்; | | காமவேள் அனையான் கலவிக்கு இசையுமே. |
|
பன்னிரண்டு வயதாகிய மங்கைப் பிராயத்தாள் பந்து விளையாடுவாள். வயதில் தனக்கிணையான தோழியருடன் ஊஞ்சல் ஆடுவாள். நீர்நிலைகளில் விருப்பத்துடன் புனலாடுவாள். எனதயோ எண்ணி அடிக்கடிப் பெருமூச்செறிவாள். அழகு பெற்று விளங்கும் நகில்களைப் பிறர் கண்களில் படாதவாறு மறைத்துக் கொள்வாள். மன்மதனைப் போன்ற அழகிய வாலிபனோடு புணர ஒருப்படுவாள் என்றவாறு. (303) |
27. | ஈர்எட்டு ஒருபதிற்று ஒன்பது இருபன் | | நான்குஎனும் வயதுடை நல்லார் ஆய | | மடந்தையும், அரிவையும், தெரிவையும் மாரன் |
|