பொருளிலக்கணம்204
திறம்”1 என முற்றிலும் வேறுவிதமாகக் கூறுகிறது. நவநீதப் பாட்டியலும் வெண்பாப் பாட்டியல் கருத்தையே கூறுகிறது.2 இவ்விரு பாட்டியல் நூற்கருத்துக்கும் இவ்வாசிரியர் கருத்திற்கும் அரிவைப்பருவம் ஒன்றில்தான் ஒற்றுமை உள்ளது.
பல அரிய செயல்களைச் செய்யும் வலிமைமிக்க ஆடவரையும் தம் வனப்பால் நெகிழச் செய்வதாலும், தம்பாலுள்ள இவ்வியற்கை ஆற்றலை உணர்ந்து கொள்ளும் பருவத்தினர் ஆனதாலும் முலைகள் ஆடவர் மொய்ம்பினும் உயர்வெனக் கருதுவர். அது பெருமிதம் ஆதலின் உரையில் அவ்வாறு உரைக்கப்பட்டது.
(304)
28.பேசலும் கலவியிற் பிணங்கா இயற்கையும்
 பாலுடைச் சரிமுலைப் பசுநரம்பு அவிர்ச்சியும்
 ஆடலில் வெறுப்பும் அனையன பிறவும்
 பேரிளம் பெண்ணின் பெட்புஎனத் தகுமே.
அதிகமாகப் பேசுதலும், மெய்யுறு புணர்ச்சியின்போது ஊடாத இயல்பும், பால் சுரக்கின்றனவும், சரிந்தனவுமாகிய நகில்களில் பச்சை நரம்புகளின் தோற்றமும் (கழங்கு, ஊசல். அம்மானை, புனல் போன்ற) விளையாட்டுகளில் விருப்பமின்மையும், இவை போன்றபிற தன்மைகளும் பேரிளம்பெண்ணின் பண்பு நலன்கள் எனலாம் என்றவாறு.
தெரிவைப் பருவத்தைக் கடந்தவள் பேரிளம்பெண். ஆதலின் வயது வரையறை கூறவேண்டாவாயிற்று. நாற்பது வயதுடையாள் பேரிளம்பெண் என வகுத்துக் கொண்டால் நாற்பத்தைந்து வயதினைள என்னென்பது? ஆகவே தெரிவை நிலையைத் தாண்டியவள் பேரிளம்பெண் எனக் கோடலே தக்கதாம்.
ஆடலில்வெறுப்பு என்பதற்குக் கலவியின் புறச்செய்கைகளில் அதிக நாட்டமின்மை என உரைப்பினும் ஆம்.
(305)