பொருளிலக்கணம்206
இச் செயல்கள் பொதுவாக மகளிருக்கொன்று கூறப்பட்டிருப்பினும் சிறப்பாக மடந்தை, அரிவை, தெரிவையர்க்காம் எனக்கொள்ளலாம்.
(307)
31.மாலைகண்டு உவப்பதும், மருப்புனல் ஆடலும்,
 சேலையும் பணிகளும், திலகமொடு மையும்
 திருத்தலும், தூரியச் செங்கைச் சேடியர்
 எழுத்தினுக்கு இசைவதும், இனையன பிறவும்
 காளைதோட் புணரும் கருத்தினள் குறிப்பே.
இந்நூற்பா காதலனோடு கலந்திருப்பாள் இயல்பு கூறுகிறது.
மாலை நேரத்தைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்வதுவும், வாசனைப் பொருள் கலந்த நன்னீராடலும், புத்தாடை உடுத்தி அணிகலன்கள் பூண்டு நெற்றிப் பொட்டுடன் கண்களில் மை எழுதித் தன் ஒப்பனையைச் செப்பஞ்செய்துகொள்ளலும், தோழியர் வாசனைக் குழம்பையும் எழுதுகோலையும் ஏந்தித் தன் தோள்களிலும் நகில்களிலும் தொய்யில் எழுத வருங்கால் அதற்கு உடன்படுவதும், இது போன்ற பிற செயல்களும் கணவனோடு சேர்ந்திருந்து அவனைக் கூடுபவளின் குறிப்புகளாம் என்றவாறு.
திலகம் சேர்ந்துவாழும்போதும், பிரிவுக்காலத்தும் நீங்காது மங்கல மடந்தையரின் நெற்றிக்கு எழில் தருவதாதலின் அதற்கு ஒடுக்கொடுத்துப் பிரித்தார். குறிப்பு என்றதனானே தன் கூடல் விழைவைக் காட்டும் சங்கேதம் எனினுமாம்.
(308)
32.பழகிய கொழுநர்தாம் பற்றிய போழ்தினும்
 காமங் கசிதரக் கடிதடங் களித்து
 வாள்நுதல் வெயர்வையும் வாய்இதழ் உலர்ச்சியும்
 கருத்தைத் காட்டினும் கடுகுஅள வேனும்
 பயிற்பொடு கோடுதல் பாவையர்க்கு அழகே.
பலமுறை கலந்து உறவாடிய கணவனே கையைப் பிடித்த காலையும், தானும் காமமிகுதியால் சுரதநீர் சுரந்து பூரித்த