அல்குலாளாகவும், ஒளிகாலும் நெற்றியில் சிறுவேர்வும், உதடுகளின் வறட்சியும் கொண்ட புணர்ச்சி வேட்கையளாகவும் இருப்பினும் ஒருசிறிதாவது பயிர்ப்புப்பண்பைக் காட்டுபவளாகக் கலவிக்கிசையாள்போல் பாவனை செய்தலே அழகிய மகளிருக்குச் சிறப்பாகும் என்றவாறு. |
இயற்கை அல்லது களவுப்புணர்ச்சி அன்றென்பார் பழகிய கொழுநர் என்றார். தலைவியும் முன்பே அதில் பழக்கப்பட்டவளே என்பதை அவள் மெய்ப்பாடுகளைக் கூறுமுகத்தான் தெளிவாக்கினார். நுதல் வெயர்வை, இதழ் உலர்ச்சி இரண்டும் அவள் இசைவை வெட்ட வெளிச்சமாக்கிய போதும் இசையாதவள் போற் செயற்படுதலின் கோடுதல் என்றார். கோடுதல் இங்கு உள்ளமும் செய்கையும் தம்முள் மாறுபடுவதை உணர்த்திற்று. (309) |
33. | அன்னம் என்று இருப்பார் அமளிஅம் கலவி | | தன்னிடை செயுந்தொழில் சாற்றரும் பாற்றும், | | கொண்கர்தம் உள்ளக் குறிப்பும் ஆமே. |
|
அன்னம்போன்ற அழகிய மகளிர் அணையில் இனிய கலவிக் காலத்தே இயற்றும் செயல்கள் இத்துணைய, இத்தகைய எனக் கூறமுடியாதனவும், தம் கணவரின் மன விருப்பத்திற்கேற்றனவும் ஆகும் என்றவாறு. |
அமளிஅம் கலவி என்பதற்குப் போராகிய இனிய புணர்ச்சி என்றோ, ஆரவாரம் நிறைந்த அழகியகூட்டம் என்றோ கூறினும் அமையும். (310) |
34. | கண்களின் சோர்வும், கவுளொடு கனிஇதழ்க் | | குறிகளும், பகற்றுயில் கொள்கையும், பிறவும் | | இனியவன் தன்னுடன் இரவுஎலாம் மதப்புனல் | | சிந்திச் சிந்திச் சேர்ந்துளாட்கு இயல்பே. |
|
தன் மனத்திற்கினிய மணாளனுடன் முதல்நாள் இரா முழுவதும் சுரதநீர் பெருகப் பெருகக் களித்துக் கலந்த தையல் நல்லாளுக்கு மறுநாள் கண்கள் சோர்வுபடுதலும், கன்னத்திலும் |