பொருளிலக்கணம்208
வீழிக்கனி போன்ற உதடுகளிலும் காதலனின் பற்குறி நகக்குறிகளின் தோற்றமும் பகல் நேரத்தில் உறங்குதலும் இதைப்போன்ற பிறவும் இயற்கையாம் என்றவாறு.
(311)
35.குறிப்புஇயல்பு இவ்வணம் குறுக்கிக் கூறினம்;
 பழமை இயல்பினைப் பகருதும் சிறிதே.
இவ்வாறாக அகப்பொருளின் குறிப்பியல்பு எனும் இப்பகுதியைச் சுருக்கமாக உரைத்துமுடித்தாம். இனி அடுத்துப் பழமை இயல்பைக் கொஞ்சம் கூறுவான் எடுத்துக்கொள்வாம் என்றவாறு.
இந் நூற்பாவினால் இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த பழமை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப் படுகிறது.
(312)
குறிப்பியல்பு முற்றிற்று.
4. பழமை இயல்பு
காதல் பற்றியசில பழமையான மரபுகளும், கருத்துகளும் இவ்வியல்பில் தொகுத்துக் கூறப்பெறுவதால் இஃது இப்பெயர்த்தாயிற்று. இதுவும் பன்னிரண்டு சூத்திரங்களைக் கொண்டது.
36.அவன்அவள் இசைதலும், அனுப்பும் தூதால்
 இசைதலும் பழமைஎன்று இசைத்தனர் புலவோர்.
தலைவனும் தலைவியும் யார் உதவியும் இன்றித் தாமே எதிர்ப்பட்டுக் கூடுதலும், ஒருவர் அனுப்பிய தூதால் (குறிப்பிட்ட இடத்தும் நேரத்தும்) சந்தித்துக் கலத்தலும் ஆகிய இரண்டுமே தொன்மையான நெறிகள் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
அவன் அவள் இசைதல் இயற்கைப் புணர்ச்சியாம். பாங்கி மதி உடன்பாடு, பகற்குறி, இரவுக்குறி, ஊடிய தலைவி தலைவனின் வாயில் நேர்ந்தபின் நிகழும் கூட்டம் முதலியன