இரண்டாவதாகும். இவை சங்கத்தொகை நூல்களிலும் இடம் பெற்றுள்ள மிகத் தொன்மையான மரபுகளாம். (313) |
37. | ஆண்பெண் எனும்உரு அமைந்தவர் தனித்தனி | | தாம்விழைந்து அளவற முயன்றும் கூடாது | | உடன்உயிர் இழந்துஈண்டு ஒழிந்தனர் பலரே. |
|
ஆடவர் மகளிர் ஆகிய இருபாலாருள்ளும் தம் காதலரைப் பெற விரும்பி பெரிதும் முயற்சி செய்தும் அது பயன்தராமையினால் இருவருமாக மாண்டொழிந்தவர்கள் பற்பலராவர், என்றவாறு. |
இச்சூத்திரத்திற்கு ஆண்கள் விழைந்து முயன்றும் கூடாது உடனே உயிர் இழந்து எனவும், பெண்கள் விழைந்து முயன்றும் கூடாது உடனே உயிர் இழந்து எனவும், ஆணும் பெண்ணும் தனித்தனியே தாம் விழைந்து முயன்றும் கூடாது ஒன்றாக உயிர் இழந்து எனவும் மூன்று விதமாகப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. (314) |
38. | கண்களால் இசையாக் காரிகை கரத்தால் | | இணங்காள் என்றமை இயம்பும்இவ் வுலகே. |
|
புணர்ச்சி விழைவோடு நோக்கப்படும் கனிவான பார்வை அழைப்பிற்கு இணங்காதவளாகிய ஒரு பெண் அவளை வலியக் கைப்பற்றினாலும் உடன்பட மாட்டாள் என்று உலகத்தினர் சொல்வார்கள் என்றவாறு. (315) |
39. | ஏதொரு நிமித்தத் தேனும் எள்துணை | | உரிமையும் இல்லார் உடல்தழீஇ மகிழ்வார் | | பதரினும் பதர்எனப் பகர்வது முறையே. |
|
ஏதாவது ஒரு காரணத்தால் ஓர் எள்ளளவாவது தன்னோடு கூடுதற்குரிய உரிமை இல்லாதவரோடு மெய்யுறு புணர்ச்சியில் ஈடுபட்டுக் களிப்பவர்களை மிகமிகப் பயனற்றவர்களும் இழிவானவர்களும் ஆவர் எனக் கூறலே தக்கதாம் என்றவாறு. |