பொருளிலக்கணம்212
பொருள் முதலிய அனைத்தையும் பலர் இழந்துவிடுவது இவ்வுலகில் இயற்கையான ஒன்றேயாம் என்றவாறு.
(322)
46.பிழையாது ஒழுகிய பெண்மகட்கு எதிர்செலும்
 முனிவரும் தெய்வமும் இலைஎனல் முறையே.
தன் கற்புநிலையினின்றுசற்றும் வழுவாமல் நடந்து கொண்ட ஒரு பெண்மணிக்கு விரோதமாகச் செயல்புரியும் வலிமை எந்தத் தவசிக்கும் எந்தத் தெய்வத்திற்கும் இல்லை என்று சொல்லப்படுவது சரியானதே என்றவாறு.
(323)
47.எவ்விதச் சுருதியும் நெறிகளும் பிறவும்
 இயங்குமாறு அவிர்தரும் இவ்வழிப் பழமை
 முற்றும்ஓ தரிதால் முடித்து, இனி அடுத்துத்
 துறைஇயல்பு எடுத்துத் தொகுத்துஉரைக் குதுமே.
எல்லாவகையான வேதங்களும், அனைத்துவகை மரபுகளும், உலகியல் நடைமுறைகளும் செவ்விதின் நடைபெறுமாறு அமைந்துள்ள இத்தகைய தொன்மை மரபுகள் அனைத்தையும் முழுவதும் விரித்துக் கூற இயலாது. எனவே இதனை இம்மட்டடக்கித் தொடர்ந்து துறை இயல்பைத் தொகுத்துக் கூறுவாம் என்றவாறு.
இச்சூத்திரத்தால் இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த பகுதியாகிய துறை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.
(324)
பழமை இயல்பு முற்றிற்று.