அறுவகையிலக்கணம்213
5. துறை இயல்பு
அகப்பொருள் துறைகளைப்பற்றிய சில கருத்துகள் இந்தப் பகுதியில் தொகுத்துக் கூறப்படுகின்றன. இவ்வியல்பு ஒன்பது நூற்பாக்களால் ஆனது.
48.இன்ப வெள்ளத்து இசைவுறும் ஒவ்வோர்
 நிகழ்ச்சியும் துறைகள் ஆம்எனல் நெறியே.
இன்ப நிறைவாகிய காமப் பகுதியோடு பொருந்தியுள்ள ஒவ்வொரு தனித்தனி நிகழ்ச்சியையும் ஒவ்வொரு துறை எனக் கூறுதல் மரபாகும் என்றவாறு.
இந்நூற்பா துறை என்றால் என்ன எனக்கூறுகிறது.
(325)
49.காண்டல், ஐயுறல், மெய்தொட்டுப் பயிறல்,
 கலவி மகிழ்தல், கான்முளைப் பழித்தல்,
 நாணிக்கண் புதைத்தல், நற்றாய் இரங்கல்,
 தழைவியந்து உரைத்தல் ஆதிய நானூறு
 என்றே பற்பலர் இயம்பினர்; சிலர்தாம்
 இம்மகள் இன்னாற்கு ஆம்என இசைதலும்
 காதலால் தொழலும், காட்டி மயக்கலும்,
 தலைவன் தேடலும், தன்உரு மாற்றலும்
 ஆதிய நவின்றனர்; அன்றியும் ஒருவன்
 பெண்மடல் ஏறிய பெற்றிகூ றினனே.
காட்சி, ஐயம், மெய்தொட்டுப் பயிறல், கலவி மகிழ்தல், பாலனைப் பழித்தல், நாணிக்கண் புதைத்தல், (மகட்போக்கிய அல்லது மகள் மெலிவுகண்ட)நற்றாய் இரங்கல், (தலைவன் அல்லது பாங்கி கையுறை ஆகிய) தழை வியந்து உரைத்தல் முதலிய அகப்பொருள் துறைகள் நானூறு எனப் பலர் கூறினர். சிலர் இத்தலைவி இன்னவனுக்குத் தக்கவள் என உடம்படல், காதலால் தொழுதல், (தலைவன் அல்லது தலைவி தன்னைக்) காட்டியபிறகு மறைந்து கொண்டு மயங்கவைத்தல், தலைவன் தலைவியைத் தேடுதல், தலைவன் மாறுவேடத்தில் வருதல்