அறுவகையிலக்கணம்217
வண்ணயாப்பு அளவால் பெரியது. அதன் பிற்பாதியாகிய நான்கு கலைகளே துறைப்பொருள் கூறப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஒரு கலை என்பது மூன்று துள்ளல்களையும் ஒரு தொங்கலையும் கொண்டதாகும். எவ்வளவு சிறிய வண்ணக்குழிப்பு எடுத்துக் கொண்டாலும் ஒரு கலை கிட்டத் தட்ட இரு கட்டளைக் கலித்துறை அளவு அமையும். எனவே எந்த ஒரு துறையைச் சற்றேறக் குறைய எட்டு கட்டளைக் கலித்துறைகளாக விரித்துக் கூற முடியுமோ அந்தத் துறையே வண்ணத்தில் இடம்பெற முடியும். உதாரணமாக இடமணித் தென்றல் என்னும் துறையை வண்ணத்தில் விரித்தால் அதன் சுவை குன்றும். எனவே தான் கலவி மகிழ்தல், நற்றாய் இரங்கல், அவயவம் எழுதல் அரிது எனல், தலைவியின் பிரிவுத் துன்பத்தை ஏதோ ஒரு வாய்பாட்டாற் கூறுதல், பாலனைப் பழித்தல் போன்ற விரித்துக் கூற வாய்ப்பளிக்கும் துறைகளே வண்ணக்கவியில் அதிகமாக இடம் பெறுகின்றன.
இது வண்ணப்பாடல்களின் நீளத்தால் நேர்கின்ற ஒன்றே யன்றித் துறைகளில் சிறுமை பெருமை இன்று.
(330)
54.துய்ப்பார் சொல்எனச் சூட்டுநர் மொழிஎன
 இருவகைத் துறைகள்ஈண்டு இலங்குகின் றனவே.
அகப்பொருளை நுகரும் பாத்திரங்களின் கூற்று என்றும் கவிக்கூற்று எனவும் அகப்பொருள் துறைகள் இருவகை உடையனவாக விளங்குகின்றன என்றவாறு.
இச்சூத்திரம் அகப்பாட்டின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகிய கூற்று பற்றிக் கூறுகிறது. தலைவன், தோழன், தலைவி, தோழி, நற்றாய், செவிலி போன்ற கதைமாந்தர் இன்ப துன்பங்களைத் தாமே அநுபவிப்பதால் துய்ப்பார் எனப்பட்டனர். சூட்டுநர்மொழி என்பது இலக்கியத்தை இயற்றி ஒரு பாட்டுடைத் தலைவனுக்கு அணிவிக்கும் கவிஞனின் கூற்றை.
(331)
55.ஒருதுறை பற்றிப் பற்பல விதமாய்ச்
 சாற்றலும் இயல்புனில் தள்ளார் புலவோர்.