பொருளிலக்கணம்220
கூடல், கூடல் நிமித்தம் என்றால் மற்ற நால்வகை நிலத்தில் அஃது இல்லையென்றா பொருள்? முல்லை நில மகளிர் ஆயுட்கால முழுவதும் தம் காதலரைப் பிரிந்து ஆற்றியிருந்து வருகிறார்களா? நெய்தல் நிலப் பெண்களுக்கு இரங்கி இரங்கிச் சாவதைத் தவிர வேறு கதியே இல்லையா?
கதைமாந்தரின் உணர்ச்சிகளாகிய அகப்பொருளை வெளிப்படுத்த இந்த ஐவகை நிலப்பாகுபாடு பெரிதும் உபகாரப்பட்டபோதிலும் இவை அகப்பொருளாக மாட்டா. அகப்பொருள் முற்றிலும் நுட்பமானவை. பருப்பொருள்கள் அனைத்தும் - தலைவன், தலைவி ஆகிய இருவரின் உடல் நீங்கலாக-புறப்பொருளாகவே கொள்ளற்பாலனவாம்.
இது பற்றியே இவ்வாசிரியர் பிறிதோரிடத்தில், “மலை வளமும், கடல்வளமும் முதலா வயங்குபுறப் பொருள் அமைப்பும், மங்கைநல்லார் கும்ப முலைவளமும் தலைவளமும், நிலைவளமும், பிறவும் மொழியும்அகப் பொருள் வியப்பும்”1 எனக் கூறுகின்றார்.
(334)
58.வான்தவழ் குடுமி வரைகளும் பறம்புக்
 கூட்டமும் குறிஞ்சி; கொள்வார் முனிவரும்
 வேடரும்; விளைவன தினையும் கிழங்கும்;
 பொலிவன அருவியும் பொழிலும் ஆதிய;
 வளம்எலாம் விரிக்கிலம்; ஆயினும் மற்றும்
 சிறிதுஉள வியன்அவை செப்புதும்; என்எனில்
 எவ்வகைத் தெய்வமும் ஆகி எம்மது
 முருகோன் நடம்இடும் முறைமைநன்கு உணரார்
 தம்தேவு உளதுஎனத் தனித்தனி வரலும்
 யாம்அது கண்டுஉவப்பு எய்தலும் ஆமே.
மேகங்கள் உலவுமளவு உயர்ந்த சிகரங்களை உடைய பெருமலைகளும், சிறிய குன்றுகளின் தொகுதிகளும் குறிஞ்சி எனப்படும். இதனைத் தம் வாழிடமாகக் கொள்பவர்கள் தவ