மாற்றம்முற்றும் காய்கனல்போல் கோபப் பவுராணி கர்க்குப்பகை”1 என்பது இவர் வாக்கு. |
திருவேங்கடத்தில் திருமாலாகவும், திருக்கழுக்குன்றில் சிவபிரானாகவும், திருச்சி மலையின் உச்சியில் விநாயகராகவும், சாமுண்டி மலையில் அம்பிகையாகவும், பழனியில் முருகனாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் விளங்குவது ஒரே பரம் பொருள். அதை இவர் முருகன் எனக்கொள்கிறார். இப்பொரு நிலை அனைவர்க்கும் எய்தல் அரிது ஆதலின் அவர்கள் தம் அறியாமை காரணமாக வேறுவேறு தெய்வங்கள் இருப்பதாகக் கருதி வருகின்றார். எவ்வாறாவது மக்கள் இறைவனை வழிபடுவதைக் கண்டு இவர் உவகை கொள்கிறார். |
இவர் தெய்வ சமரசமும், பரம்பொருள் ஒன்றே என்னும் தெளிவும் உடையவர். எனினும் ஆன்ம வழிபாட்டிற்கு ஒரு தெய்வ வடிவ உபாசனை அவசியம் என்கிறார். இவர் முருகப் பெருமானைப் பரம்பொருளாக உபாசிப்பவர். எனவே இங்கு அந்த உரிமைபற்றி எம்மது முருகோன் என்றார். (335) |
59. | துழாயொடு பிறவும் சூழ்ந்த காடெ | | முல்லை; வாழ்பவர் மூவாப் பொதுவர்; | | கமழ்வன பால்தயிர்; கடவுள்மா யவனே. |
|
துளசியோடு மற்றவகையான தாவரங்கள் மண்டி வளர்ந்துள்ள காட்டுப் பகுதியே முல்லை எனப்படும். இந்நிலத்தில் வாழ்பவர் எப்போதும் அப்பகுதியை விட்டு விலகாத ஆயர்கள் ஆவர். இந்நிலத்தில் பாலும் தயிரும் எந்நேரமும் மணம் பரப்பிக் கொண்டு இருக்கும். இம்முல்லை நிலத்திற்குரிய தெய்வம் திருமாலாம் என்றவாறு. |
முல்லை நிலத்தில் மிகப்பல வகையான மரம் செடி கொடிகள் இருக்கத் துழாயைக் கூறியது அது அந்நிலக் கடவுளுக்குச் சிறப்பாக அமைந்தது பற்றி. (336) |
|