அறுவகையிலக்கணம்225
ஒவ்வொரு நிலத்தில் தலைமை பூண்டவர்களுக்கு அவ்வந் நிலத்திற்கு உரிய செல்வங்கள் மட்டுமே கிடைக்கும். மீறிப் போனால் அடுத்த நிலப்பகுதியின் சிறப்பில் சிலவற்றைப் பெறலாம். ஆனால் இந்நூற்பாவில் கூறப்பெற்றிருப்பவர் அனைவர்க்கும் பொதுவானவராகவும், அனைவராலும் போற்றப் பெறுபவராகவும் இருத்தலின் ஐந்நிலச் செல்வமும் ஒருங்கே எய்தற்பாலார் ஆவர்.
(340)
64.குறிஞ்சிஊர் குறிச்சி; முல்லையூர் பட்டி;
 மருதத்து ஊர்நகர்; நெய்தல்ஊர் பட்டினம்;
 இவற்றை நானிலம் என்றனர் புலவோர்.
குறிஞ்சிப்பகுதியில் உள்ள ஊர் குறிச்சி என்றும், முல்லை நிலத்தது பட்டி என்றும், மருதத்தின்கண் உள்ளது நகர் என்றும் நெய்தற் பிரிவைச் சார்ந்தது பட்டினம் எனவும் பெயர் பெறும். இந்த நால்வகை நிலங்கள் அடங்கிய பகுதியே நானிலம் எனப் புலவர்களால் அழைக்கப்பட்டது என்றவாறு.
நம்பிஅகப்பொருள் இந் நான்கு திணைகளுக்குரிய மக்கள் நெருங்கி வாழிடத்தை முறையே சிறுகுடி, பாடி, பேரூர் அல்லது மூதூர், பாக்கம் அல்லது பட்டினம் எனக்கூறும். ஊர், ஊரன் என்பன மருத நிலத்திற்கு உரியதாக இலக்கியங்களுள் வழங்கப்படினும் இவர் அச்சொல்லைப் பொதுவானாதாக எடுத்துக்கொண்டு நகர் என்ற சொல்லைச் சிறப்புச் சொல்லாக்குகிறார். இது வடமொழித் தாக்கம்.
(341)
65.என்புஊன் வேண்டுநர் யாவரும் பாலைக்கு
 உரியார்; அன்னவர் ஊர்ப்பெயர் சேரி;
 அவர்தெய்வம் அனைத்தும் அலகைத் திரளே
 என்னும் தெளிவினர் இயற்றமிழ்ப் புலமை
 வள்ளுவன் திருத்தாள் மலர்தொழும் அவரே.
எலும்பையும் மாமிசத்தையும் உணவாக விரும்புகிறவர்கள் யாவரும் பாலை நிலத்தில் வாழ்தற்குரியவர்களாம். அவர்கள் வாழும் ஊர் சேரி எனப்படும். அவர்களால் வணங்கப்படுகின்ற