அறுவகையிலக்கணம்227
67.ஒருநிலத்து உறுவன மற்றொன் றிடத்தில்
 புகுவதுஉண்டு; அம்முறை புகல்வதும் இயல்பே.
ஒரு பிரிவாகிய நிலத்திற்கே சிறப்பாக உரியதாகிய கருப் பொருள்கள் வேறொரு நிலத்திலும் காணப்படலாம். அவ்வாறு இடம் மாறி விளங்குவதைப் புலவர்கள் விளக்கிப் பாடுவதும் மரபே என்றவாறு.
ஒரு திணைக்குரிய கருப்பொருள்கள் வேறு திணையில் விளங்குவதைப் பாடுவதற்கு திணை மயக்கம் எனப்பெயர்
(344)
68.நிலத்துஇயல்பு இவ்வணம் நிகழ்த்தினம்; இனிச்சிறிது
 உழிஇயல்பு உரைக்குதும் உணர்ந்த வாறே.
ஐவகை நிலத்தின் இயற்கைத் தன்மைகளை இவ்வாறு கூறி முடித்தோம். அடுத்துப்பலவகையான மக்களின் வாழிடங்களைப் பற்றி யாம் அறிந்த படி சொல்வாம் என்றவாறு.
இந்நூற்பாவால் இப்பிரிவு நிறைவு செய்யப்பட்டு அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்டது.
(345)
நிலத்தியல்பு முற்றிற்று
2. உழி இயல்பு
உழி-இடம்; இங்கு இருப்பிடத்தைக் குறித்து நின்றது. இவ்வியல்பில் தவசிகள், நால்வருணத்தோர் வாழிடங்களில் காணப்படுவனவும், போர்க்களம், புலவர்அவை போன்றவைகளும் கூறப்படும். இவ்வியல்பு பதினொரு சூத்திரங்களைக் கொண்டது
69.தவத்தோர் உறையுளில் தண்டொடு கமண்டலம்
 கோவணம் மரவுரி குலவுகல் லாடை
 வெண்ணீறு அணிமணி வேடர்கண்டு உரித்த
 கொல்லாப் புலித்தோல் ஆதிய குலவுமே.