பொருளிலக்கணம்228
தவசிகளின், வசிப்பிடத்தில் யோகதண்டம், நீர்க்குடுவை, கௌபீனம், வற்கலை, காவிக்கல் தேய்த்த ஆடைகள், திருநீறு, அக்கமணி, இயற்கையாக இறந்த புலியின் உடலைக் கண்ட வேடர்கள் பிரித்தெடுத்து பதப்படுத்திய புலித்தோல் முதலிய தவச்சாதனங்கள் இருக்கும் என்றவாறு.
கொல்லாமை இங்கும் வற்புறுத்தப்படுகிறது. வேடர்கள் கூடப் புலியைக் கொல்லாமல் இயற்கை மரணம் எய்திய விலங்கின் தோலைச் சேகரிக்க வேண்டும் என்கிறார். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் புலியையே கொல்ல மாட்டார்கள் என்றால் தீமை புரியாத மான்களுக்குத் தொல்லை தரார் எனக் கூற வேண்டாவாயிற்று. புலவர் புராணத்தில் இது பற்றியே, “வில்லுடன்புகும் வேடரும் வேறுயிர்க் கொல்லு நீர்மை தவிர்ந்ததக்குன்றமே”1 எனவும், “மற்ற வெற்பின் வனசரர் போலவே கொற்ற வில்கரங் கொண்டுஅவர் கொய்கனி பெற்றம் ஊரும் பிரான்நிகர் பீடுடை நற்ற வர்க்குஉணவு ஆம்மிக நாளுமே”2 எனவும் கூறுகிறார்.
(346)
70.பாம்புநா வகிர்ந்த பசும்புலும், செங்கனல்
 குண்டமும், திரித்தநூற் கோலும், சுருதியும்,
 மஞ்சளில் கலந்து வைத்தபச் சரிசியும்,
 மாவிலை, தொன்னை ஆதியும் அன்றி
 நூற்பொருள் உணர்தரும் நுண்ணிமை இல்லார்
 கொலைமகம் புரிதற் குறித்துஅயர்ந்து உயிர்க்கும்
 இரக்கமும் பொலிவுறும் ஈசன் என்றே
 உலகினர் வழிபட உயர்ந்தோர் இடத்தே.
பூசுரர்கள் என்று மக்களால் போற்றப்படும் அளவு உயர்ந்தவர்கள் ஆகிய அந்தணர்களின் இல்லங்களில் பாம்பின் நாக்கைப்போல் பிளவுண்ட பசுமையான தருப்பைப் புல்லும், தினந்தோறும் ஒளபாசனம் எனப்படும் வேள்வி இயற்றுதற்குரிய யாககுண்டமும், முப்புரி நூலாகிய பூணூலைத் தயாரிப்பதற்