குரிய தக்கிளியும், வேதத்தின் ஒலியும், மஞ்சள் கலந்த பச்சரிசியாகிய அட்சதையும், மாவிலை, வாழை இலையால் தைக்கப்பட்ட கிண்ணம் போன்ற தொன்னைமுதலிய வழிபாட்டிற்குரிய பொருள்களும் விளங்கும். இவையேஅன்றி வேதத்தால் கூறப்பட்ட மெய்ப்பொருளையறியும் அறிவுக் கூர்மை இல்லாத பல அந்தணர்கள் உயிர்க் கொலையொடுபட்ட தீவேள்வி புரிகின்றார்களே என மனம் வருந்திப் பெருமூச்சுவிடும் அழகிய தட்பமும் விளக்கமுறும் என்றவாறு. | வேதங்கள் எழுதாமறை ஆதலின் சுருதி என்புழி வேதநூல்கள் என்னாது வேதஒலி என்றுரைக்கப்பட்டது. “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று”1 என்னும் நுட்பம் உணராத இடைநிலை வேதியார் குறித்து உயர்நிலை அந்தணர் வருந்துவர். “வேதம் சொல்லினும் விரிஞ்சன் ஆதியர் நேரிற் கூறினும் நீசர்க்கு உரித்தாம் கொலைபுலை செய்தல் கூடாதன்றே”2 “சீர் அருள் விழைவோன் தெய்வப் பிராமணன்; அழல்தசை நுகர்வோன் அசுரவேதியன்; தம்மில் தாழ்ந்தோர் தமக்கே பணிசெயக் காதலிக்கின்றோன் கடைப்பார்ப் பானே”3 என்னும் இவருடைய வாக்குகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. (347) | 71. | வகை முரசமும், முத்தமிழ்ப் புலவர் | | ஆர்வமும், கரிபரி ஆதியின் பெருக்கும், | | கதிர்வாட் சேவகர் காப்பும், பசும்பொன் | | நவமணிக் குவியலும், நடம்பயில் அரங்கும் | | ஆக்கமும் செருக்கும், அறநெறி ஆதியும் | | மன்னர்வாழ் அரண்மனை வாய்ந்த பொருளே. |
| (வெற்றி, கொடை, மணம் ஆகியவற்றிற்குரிய) மும்முரசுகளின் முழக்கமும், (இயல், இசை, நாடகமாகிய) மூவகைப் புலவர்களின் மீதும் அபிமானமும், யானை, குதிரை, (தேர், காலாள்) போன்ற சேனைகளின் மிகுதியும், ஒளிவீசுகின்ற ஆயு | |
|
|