தங்களை ஏந்திய வீரர்களின் பாதுகாவலும், சொக்கத் தங்கம் நவரத்தினங்கள் போன்ற செல்வ மிகுதியும், (இசையோடு) கூத்து நிகழ்வதற்குரிய மண்டபங்களும், நாளுக்குநாள் (செல்வம், அதிகாரம், புகழ்) இவைகளின் வளர்ச்சியும், (நாடாளும் மன்னனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அளவு) பெருமிதமும், அறம் பொருள் இன்பத் துறைகளுக்கு வேண்டுவன யாவும் அரசர்களின் அரண்மனையின்கண் இருக்கத்தக்கனவாம் என்றவாறு. | ஈண்டுச் செருக்கு என்றது அகத்தையை அன்று; சிறந்த பெருமிதத்தை. (348) | 72. | துணிவொடு செட்டும், தொலையாக் கணக்கும், | | வட்டியும், திட்டமும், மாழை மணிதுகில் | | ஆதியும் வணிகருக்கு ஆன பொருளே. |
| (புதிய வியாபாரங்களில் ஈடுபடுவதற்கேற்ற) துணிச்சலும், சிக்கனமும், எந்த நிலையிலும் தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற (வரவுசெலவுக்) கணக்கும், வட்டியும், (வியாபாரத்தை மேலும் மேலும் விரிவாக்குவதற்குரிய) எதிர்காலத் திட்டங்களும், பொன் நவரத்தினங்கள் ஆடைவகைகள் போன்ற (சொந்தத் துய்ப்புக்கும் விற்பனைக்கும் உரிய) விலை உயர்ந்த பொருள்களும் வணிகர்களுக்கான பண்டங்களாம் என்றவாறு. (349) | 73. | மேழிச் சீரும், விளைந்தநெற் குவியலும், | | கன்னல்முத் தளவிய காலும், நாழியும் | | அருமையும் தகுதியும் ஆகிய பிறவும் | | நாலாம் குலத்தினர் நன்மனைப் பொருளே. |
| விவசாயத்தால் விளைந்த செல்வமும், நன்கு பயிராகிய நெல் முதலிய அனைத்துவகைத் தானியங்களின் குப்பையும், முத்துகள் விளைந்த கருப்பங் கழிகளும், தானியங்களை அளப்பதற்குரிய முகத்தலளவுக் கருவியாகிய நாழியும், (வேளாண்மையால் உலகைப் பாதுகாப்பதால் இயல்பாகப் பெற்ற) |
|
|