அறுவகையிலக்கணம்231
அருமைப்பாடும், (புலவர்களால் போற்றப்படும், தகுதியும், மேலும் விருந்தோம்பல் முதலிய சிறந்த பண்புகள் யாவும் வேளாண் மக்கள் வாழ்கின்ற நல்ல வீட்டின் கண்ணே உள்ளனவாம் என்றவாறு.
மேழி ஆகுபெயராக விவசாயத்தை உணர்த்திற்கு. மேழிச் சீர்-மூன்றன்தொகை. நெல் மற்ற தானியங்களுக்கும் உபலட்சணம். கன்னல் முத்தளவிய கால் என்பதற்குக் கரும்பில் தோன்றிய நன்முத்துக்களை அளந்த மரக்காலும் எனினும் அமையும்; என்றாலும் இலக்கண நூலாகிய இதில் உயர்வு நவிற்சி வேண்டா ஆதலின் வேறுவிதமாக உரைக்கப்பட்டது.
(350)
74.நால்வகைக் குலங்களைத் தனித்தனி தமதுஎனப்
 பகர்தரும் சிற்சிலர் மனைப்பொருள் பலவும்
 கூறிலம்; சொல்முறை குறித்தவர் தம்மில்
 பெரியர்யாம் யாம்எனப் பிணங்குமாறு உணர்ந்தே.
மேற்கூறிய நான்கு வருணங்களையும் அவை சிறப்பாக எம்முடையனவே எனக்கூறும் சிற்சில இனத்தாரின் வீடுகளிலுள்ள பொருள்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஏன் எனில் இனப்பெயர்களாகிய சொற்களை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்குள் யாமே உயர்ந்தவர்கள் என மாறுபடுகின்றனர் ஆதலின் என்றவாறு.
அந்தணர்களால் மூன்றாம்குலம் எனப்படும் தேவாங்கருட் சிலரும், நான்காம் குலம் எனப்படும் கம்மாளரிற் சிலரும் தம்மை முதற்குலமாகச் சொல்லிக் கொள்வர். அவ்வாறே நாலாங்குலம் எனப்படும் சில வகுப்பினர் தம்மை இரண்டு மூன்றாங்குலத்தவர் என்பர். இவ்வாறு தேவாங்கப் பிராமணர், விசுவகர்மா, கோவைசியர் போன்ற சொல்முறை பற்றிப் பிணங்குவர் என்று தெரிவிக்கிறார். இத்தகைய நூற்பாக்கள் இந் நூலாசிரியர் காலத்தே மண்டியிருந்த சாதிவாதப் பிரிவினைகளையும் பூசல்களையும் காட்டுகின்றன.