75. | கள், அரக்கு, என்பு, ஊன், கடிநாய், பன்றி | | ஆதிய கடைப்படும் ஐந்தாம் குலம்உறு | | சேரியின் பொருள்எனச் செப்பினர் புலவோர். |
| கள், சாராயம், எலும்புத் துண்டுகள், மாமிசம், பிறரைக் கடிக்கும் இயல்புள்ள நாய், பன்றி போன்ற இழிந்தவையே பஞ்சமர்கள் வாழ்கின்ற சேரியில் இருக்கும் என்றார் அறிஞர் என்றவாறு. (352) | 76. | கவந்தமும் காளியும் கூளியும் அலகைத் | | திரளும் ஆடலும் செந்நீர் ஆறு | | நிணம்மிதந்து ஓடலும், நிறைமணி முடிமுதற் | | கலன்எலாம் மிதிபடும் காட்சியும், நரிநாய் | | கழுகொடு பருந்தும் காக்கையும் படர்தலும், | | வென்றியும், தோல்வியும், வேறுபல் இயல்பும் | | பொருகளச் சீர்எனப் புகன்றனர் புலவோர். |
| தலையறுபட்ட முண்டங்கள், கொற்றி, பூதங்கள், பேய் கூட்டங்கள் ஆகிய இவை கூத்தாடுதலும், உதிரம் ஆற்றுப் பொருக்காய் ஓட அதில் மாமிசம் மிதந்து செல்லும் காட்சியும், இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மகுடம் முதலிய பற்பல அணிகலன்கள் தரையில் வீழ்ந்து (வீரராலும் விலங்குகளாலும்) மிதிபடுதலும், நரிகள் நாய்கள் கழுகுகள் பருந்துகள் காக்கைகள் ஆகியன (தத்தமக்கு வேண்டிய இரைமிகுதியாகக் கிடைப்பதால்) நெருங்குதலும், ஒரு சாராருக்கு வெற்றியும் மறு சாராருக்குத் தோல்வியும், “கூடலர் குடர்மாலை சூட்டிவேல்திரித்து விரும்பி யாடும்”1 பிள்ளையாட்டு, “ஒன்னாதார் படைகெழுமித் தன்ஆண்மை எடுத்து உரைக்கும்”2 நெடுமொழிவஞ்சி, ‘மண்கெழு மறவன் மாறுநிலை நோனான் புண்கிழித்து முடியும்”3 மறக்காஞ்சி, “பொருபடை களத்து அவிய இருவேந்தரும் இகல்அவியும்”4 இருவருந்தபுநிலை, “குடை மயங்கிய வாள் | |
|
|